அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள்; எந்த பதவியை ராஜினாமா செய்வர்?

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், அமைச்சராக வேண்டும் என்பதற்காக,
Vaithilingam, , KP Munusamy, ADMK

சென்னை : அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், அமைச்சராக வேண்டும் என்பதற்காக, இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியிலும்; வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியிலும் களமிறங்கினர். இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியை பறிகொடுத்துள்ளது. எனவே, இருவரும் எம்.பி., பதவியில் தொடர்வரா அல்லது துறப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.பி., பதவியை தொடர்ந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.


latest tamil news



அந்த தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கும். எம்.எல்.ஏ., பதவியில் இருந்தால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது, எம்.பி., பதவிக்கு இடைத்தேர்தல் வரும்.எனவே, இவர்கள் இருவரால், எம்.பி., பதவி அல்லது எம்.எல்.ஏ., பதவிக்கு, இடைத்தேர்தல் வருவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., - எம்.பி., முகமது ஜான் மறைவு காரணமாக, அவரது எம்.பி., பதவி காலியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03-மே-202118:08:23 IST Report Abuse
Anbuselvan ரெண்டு ஸீட்டுலே அதிமுக இழக்கறதுக்கு ஒன்னும் இல்லை. ஆனா திரு வைத்தியலிங்கத்தின் ராஜ்ய சபா பதவி 2022 இல் முடிந்து விடுகிறது. திரு முனுசாமி ஐ ஏன் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள் என தெரியவில்லை அவரது ராஜ்யசபா MP பதவிக்காலம் 2026 வரை உள்ளது. திரு முனுசாமி ராஜினாமா செய்வார். திரு வைத்தியலிங்கம் ரேஸிங் செய்ய மாட்டார்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202100:33:50 IST Report Abuse
தல புராணம்அந்த ரெண்டு எம்எல்ஏ சீட்டையும் அடுத்து வந்த வேட்பாளருக்கு கொடுத்து விடுவது தான் முறை.. இல்லைனா இடைத்தேர்தலுக்கு இவர்களின் கட்சியிடம் செலவு பணத்தை அரசு வசூலிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்துக்கும் சேர்த்து....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
03-மே-202117:58:01 IST Report Abuse
Darmavan பொது நல அமைப்புகள் இதற்கு வழக்கு போட வேண்டும்.தேர்தல் செலவை வென்று ராஜினாமா செய்பவர்கள் ஏற்க வேண்டும் என்று.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202100:31:41 IST Report Abuse
தல புராணம்புதுச்சேரி தேர்தலில் ரங்கசாமி ரெண்டு இடத்திலே நின்னு போட்டியிட்டார், பொது நல அமைப்புகள் இதற்கு வழக்கு போட வேண்டும்.தேர்தல் செலவை பாஜாக்கா / ரெங்கு கிட்டே வசூல் பண்ணனும்னு சொல்லுவியா ?? நல்லவேளை ரெண்டு இடத்துலே நின்னாப்புலே.. இன்னொரு இடத்திலே சுயேச்சை கிட்டேயே அடி வாங்கி தோத்திருக்காரு.....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
03-மே-202117:49:04 IST Report Abuse
Darmavan இந்தபொறுப்பற்ற திருடர்களிடம் மறு தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202100:30:20 IST Report Abuse
தல புராணம்புதுச்சேரி தேர்தலில் ரங்கசாமி ரெண்டு இடத்திலே நின்னு போட்டியிட்டார், அவரையும் "திருடன்", அந்த திருடன் கிட்டேருந்து வசூல் பண்ணனும்ன்னு சொல்லுவியா ?? நல்லவேளை ரெண்டு இடத்துலே நின்னாப்புலே.. இன்னொரு இடத்திலே சுயேச்சை கிட்டேயே அடி வாங்கி தோத்திருக்காரு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X