அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்துக் கணிப்புகள் பொய்யாகி மண்டல அளவில் வீசிய அலை

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில், மாநில அளவில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசும் என, தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பொய்யாகி, மண்டல, மாவட்ட அளவில் தான், இரு அணிகளுக்கும் சாதக, பாதகமான அலை வீசியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில அளவில் அலை வீசி, எதிர்கட்சி கூட்டணி, 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாறு உண்டு. நடந்து
TN election results, ADMK, DMK

சென்னை: சட்டசபை தேர்தலில், மாநில அளவில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசும் என, தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பொய்யாகி, மண்டல, மாவட்ட அளவில் தான், இரு அணிகளுக்கும் சாதக, பாதகமான அலை வீசியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில அளவில் அலை வீசி, எதிர்கட்சி கூட்டணி, 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாறு உண்டு. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, மாநில அளவில் அதிருப்தி அலை வீசி, தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவனமும், பல தொலைக்காட்சிகளின் கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன.


latest tamil news



ஆனால், அந்த கணிப்புகள் அனைத்தும் பொய் என, இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. மாநில அளவில், தி.மு.க., எதிர்பார்த்த ஆதரவு அலை வீசவில்லை; அ.தி.மு.க.,க்கு எதிரான அதிருப்தி அலையும் வீசவில்லை. அதேநேரத்தில், மாநில அளவில் வீசாத அலை, மண்டல அளவில் வீசியுள்ளது.

அதாவது, அ.தி.மு.க., கூட்டணிக்கு கொங்கு மண்டலம், வடக்கு மண்டலத்தில் சாதகமான அலை வீசியுள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு சென்னை மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் பகுதிகளில் சாதகமாக அலை வீசியுள்ளது. அதேபோல, மாவட்ட அளவில் சில தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., என, சரிசமமாக கைப்பற்றியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Coimbatore,இந்தியா
03-மே-202117:54:20 IST Report Abuse
Ram ஜாதி ஓட்டுக்கள் மூலமே அதிமுக இரண்டு மண்டலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இது தான் உண்மை, இந்த ஜாதி வெறி மூலமே அதிமுக அழியும்.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
03-மே-202119:44:39 IST Report Abuse
பெரிய ராசு அப்ப முசுலீம் கிறிஸ்டின் எல்லாம் என்ன ?...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
04-மே-202113:01:32 IST Report Abuse
Jayvee.. உங்க கூட்டணில எல்லோரும் நல்லவன்க? அந்த குருமா வை ஜாதி ஒதுக்கீடும் வேணாம். PCR சட்டமும் வேணாமுன்னு ஆபாசராசா சொன்னார் ஸ்டாலின் மாதிரி பிறந்தவனா இருந்த சொல்ல சொல்லு ஏன் ஆபாச ராசாவை சொல்ல சொல்லு. நான் அந்த ஜாதி இல்லைன்னு ? அதுக்கெல்லாம் டாக்டர் க்ரிஷ்ணமுர்ததி மாதிரி ஆம்பளையா இருக்கணும்.....
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
03-மே-202116:56:30 IST Report Abuse
Somiah M கருத்து கணிப்புக்கள் கணிக்கப் பட்டதாகஇருந்தால் சரியாகத்தான் இருக்கும் .ஆனால் வாங்கப் பட்டதாக இருந்தால் சரியாக இருக்குமா ?
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
03-மே-202116:26:52 IST Report Abuse
Sivaraman இந்த தோல்வி மோசமானத்தோல்வி அல்ல . கலைஞர் இரண்டு புரட்சித்தலைவி நான்கு இடங்கள் பெற்ற தேர்தல் வரலாறு உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X