அரசியல் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டில் தி.மு.க., அதிர்ச்சி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் கணிசமான அளவுக்கு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக விழுந்துள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலில், ஐந்து முனை போட்டி இருந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருந்தது. கூட்டணியில், பா.ஜ., முக்கிய பங்கு வகித்ததால், இந்த தேர்தலின் முடிவுகள், தேசிய
TamilnaduElections, DMK, PostalVotes, திமுக, தபால் ஓட்டு

சென்னை: சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் கணிசமான அளவுக்கு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக விழுந்துள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், ஐந்து முனை போட்டி இருந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருந்தது. கூட்டணியில், பா.ஜ., முக்கிய பங்கு வகித்ததால், இந்த தேர்தலின் முடிவுகள், தேசிய அளவில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு துவக்கத்தில் இருந்தே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தனர். புதிய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்றவற்றில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எண்ணங்கள், அ.தி.மு.க.,வுக்கு எதிராகவே இருந்தன. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் பெரும்பாலும், தி.மு.க.,வுக்கே விழும் எனக் கருதப்பட்டது.


latest tamil news



அதிலும், 90 சதவீதம் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு மட்டுமே கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்று காலை, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட போது, சரிசமமான ஓட்டுகள், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு விழுந்திருந்தன. தபால் ஓட்டுகள் எண்ணும் போதே, தி.மு.க.,வுக்கு இணையாக அ.தி.மு.க.,வும், பல இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. தபால் ஓட்டுகள் அதிகம் விழுந்தது, அ.தி.மு.க.,வினரை ஆச்சரியமடைய செய்தது.
இதன்பின், பொதுவான வாக்காளர்களின் ஓட்டுகள், மின்னணு இயந்திரத்தில் எண்ணப்பட்ட போது தான், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்து, தி.மு.க., வேட்பாளர்கள் அதிகம் முன்னிலை பெற முடிந்தது. வழக்கத்துக்கு மாறாக, தபால் ஓட்டுகள் குறைவாக கிடைத்தது, தி.மு.க.,வினரை யோசிக்க வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
03-மே-202116:25:21 IST Report Abuse
MURUGESAN வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. சந்தோசமாக வாழப்போகிறீர்கள். அனைவரும் தான்.
Rate this:
Cancel
anand - chennai,இந்தியா
03-மே-202113:01:11 IST Report Abuse
anand அரசுஊழியர் ஆசிரியர் மட்டும் இந்த தேர்தலில் தபால் வோட்டை போடவில்லை பத்திரிகைக்கார களுக்கும் 8௦ வயதுக்கு மேற்பட்டவர்க்கும் தபால் வோட்டை போட அனுமதி அளிக்கப் பட்டுஇருந்தது இந்த தேர்தலில்
Rate this:
Cancel
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
03-மே-202112:52:02 IST Report Abuse
E Mariappan முதியவர்களுக்கு தபால் ஓட்டு போட வழங்கிய வாய்ப்பை ஆண்ட கூட்டணி தவறான வழிகளில் பயன் படுத்தி இருக்கும் என்பது காலை தபால் ஓட்டு எண்ணும் போது அதிமுக 100 தொகுதியில் முன்னணியில் இருக்கும் போது தெரிந்தது
Rate this:
suresh - nagercoil,இந்தியா
03-மே-202115:00:23 IST Report Abuse
sureshஇதுக்கு ஒரு பழமொழி இருக்கு... ஆத்து நிறைய வெள்ளம் போனாலும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X