பொது செய்தி

தமிழ்நாடு

"கண்கொத்தி பாம்புபோல எங்கே என்ன நடக்கிறது என திமுகவினர் விழிப்புடன் இருக்கிறீர்களோ..."

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், அவசரம் அவசரமாக பல பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவறு. புதிய ஆட்சி அமைந்தவுடன் அந்த பணியிடங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.- தி.மு.க., - எம்.பி., இளங்கோவன்'கண்கொத்தி பாம்பு போல, எங்கே
பேச்சு_பேட்டி_அறிக்கை, திமுக, இளங்கோ

தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், அவசரம் அவசரமாக பல பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவறு. புதிய ஆட்சி அமைந்தவுடன் அந்த பணியிடங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
- தி.மு.க., - எம்.பி., இளங்கோவன்


'கண்கொத்தி பாம்பு போல, எங்கே என்ன நடக்கிறது என, தி.மு.க.,வினர் விழிப்புடன் இருக்கிறீர்களோ...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் அறிக்கைபுதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு சார்பில் சப்ளை செய்யப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஊசி மருந்து சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும்.
- புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன்


'மருத்துவம் பார்க்கும் டாக்டரான உங்களுக்குத் தான் 'ரெம்டெசிவிர்' மருந்தின் தேவை புரியும். அதுவும் குட்டி மாநிலமான புதுச்சேரி மக்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் இதில் வெளிப்படுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கைஅத்தியாவசிய பொருட்களுக்கான வினியோகத்தை, மாநில அரசே ஏற்று நடத்துமானால், வரும், 15 வரை கடைகளை அடைத்து, கொரோனா ஒழிப்புக்கு ஒத்துழைக்க வணிகர்கள் தயாராக உள்ளனர்.
- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா


'அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். எனவே, இந்த நேரத்தில் விதண்டாவாதங்கள் வேண்டாமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கைlatest tamil news


இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளதால், 15க்கும் மேற்பட்ட நாடுகள் தாங்களாகவே உதவி செய்ய முன்வந்துள்ளன. அந்த நாடுகள் மற்றும் பிற நாடுகளின் உதவிகளை தயக்கமின்றி பெற, மத்திய அரசு தயாராக வேண்டும். இதில், மெத்தனம் காட்டக் கூடாது.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'சில கட்சித் தலைவர்களின் பழக்கத்தை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள்... வல்லரசாக வளர்ந்து வரும் நாடு, உதவிகள் பெறுவதில் சற்று யோசிக்கத் தான் செய்யும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கைவிவசாயத்தை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் கொடிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள், ஐந்து மாதங்களுக்கும் மேல் போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல், கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மோடி அரசு ஆணவத்தோடு செயல்பட்டு வருகிறது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'விவசாயிகள் தான், போராட்டத்தை முடித்துக் கொண்டால், குடியா முழுகிப் போய் விடுகிறது. போராட துாண்டிய உங்கள் கட்சி, வாபஸ் பெற சொல்லலாமே...' என, அறிவுறுத்தத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
03-மே-202119:59:45 IST Report Abuse
Ashok Subramaniam வீரமணிக்குப் பிச்சை எடுக்க என்றுமே தயக்கமில்லை.. அவர்கிட்ட ஒரு திருவோடு கொடுத்து அனுப்பிச்சிடலாம்.. உதவியா வந்து குவிஞ்சிடும்..
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
04-மே-202108:00:06 IST Report Abuse
ayyo paavam naanஅது நாட்டுக்கு நல்லது என்றால் அதை வீரமணி செய்வாரா?...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-மே-202119:19:41 IST Report Abuse
vbs manian கண் கொத்தி பாம்பு எங்கெல்லாம் இறை இருக்கிறது என்று தேடுகிறது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-மே-202115:24:57 IST Report Abuse
vbs manian டில்லியில் கொரோனா தீவிரத்துக்கு இந்த அடாவடி விவசாயிகளும் ஒரு காரணம். கும்பமேளாவை குறை கூறும் எல்லோரும் ஊரையே நாரடித்து கொண்டு உட்கார்ந்திருக்கும் இந்த கும்பலை பற்றி மூச்சு பேச்சு இல்லை. நீதிமன்றமும் மௌனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X