மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எங்கள் சித்தாந்தத்தை பரப்புவோம்: ஜே.பி.நட்டா உறுதி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: ''மேற்கு வங்கத்தில் எங்கள் தொண்டர்களின் கடின உழைப்பால், பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. தொடர்ந்த எங்கள் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் அங்கு பரப்புவோம்,'' என, பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியைத்

புதுடில்லி: ''மேற்கு வங்கத்தில் எங்கள் தொண்டர்களின் கடின உழைப்பால், பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. தொடர்ந்த எங்கள் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் அங்கு பரப்புவோம்,'' என, பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.latest tamil newsமேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பா.ஜ., 77 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் பா.ஜ., 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தெரிவித்த நிலையில், 100 இடங்களில்கூட வெல்லவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:மேற்கு வங்க மக்கள் அளித்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்கிறோம். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக பா.ஜ., மாநிலத் தலைவர் திலிப் கோஷ்க்கும், அவரின் கடின உழைப்புக்கும் நன்றி.


latest tamil newsஇது பா.ஜ., தொண்டர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி, பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., முன்னேறியுள்ளது. தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பா.ஜ., உழைக்கும். பா.ஜ., தனது சித்தாந்தத்தை மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்கும். அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளாவிலும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-மே-202113:01:37 IST Report Abuse
A.George Alphonse அந்த முருக பகவானே அவருக்காக வேல் ஏந்தியவருக்கு பெரிய ஆப்பையே சொருகி அவரை மீண்டும் எழாமல் செய்துவிட்டார்.என்னே அந்த கந்தன் கருணை.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-மே-202102:07:29 IST Report Abuse
Milirvan தமிழக வாக்காளர்களின் வோட்டு பதிவை கூர்ந்தால், சிறுப்பாண்மை வாக்குகள் மசூதி, சர்ச்சியில் தூண்டியது போலவே டீம்காவுக்கு விழுந்திருப்பது புரியும்.. ஆனால் ஹிந்துக்களின் வோட்டு அப்படி மத அடிப்படையிலில்லாமல் சித்தாந்தத்தின் /பணத்தின் அடிப்படையில், மாற்றுமதத்தோர் தேர்தலை அணுகுவதைப்பற்றிய புரிதல் இல்லாமல் செலுத்தப்பட்டிருக்கிறது.. ஏன் ஹிந்து வழிபாட்டு ஸ்தலங்களையும், அமைப்புக்களையும் வோட்டு பிரச்சாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது? மசூதி, சர்ச்சில் செய்கிறார்களே? இன்றிலிருந்தே மற்றவரின் கயமையை ஹிந்துக்களிடையே தெளிவிக்க வேண்டும்.. இதனை தீவிரமாக முன்னெடுத்தால் பெரும்பான்மையினரின் நலன் காக்க ஏதுவாகும்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
04-மே-202100:42:44 IST Report Abuse
மதுரை விருமாண்டி சக்கரை வியாதி மருந்துக்கு விலை கட்டுப்பாடு உண்டு.. ஆனால் பெருந் தொற்று தடுப்பூசிக்கு விலை கட்டுப்பாடு கிடையாது. சக்கரை நோயால் ஊரடங்கு, தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, பசி, கல்வி இடங்கள் மூடல் தொழில்கள், நிரந்தரமற்ற வாழ்க்கை, விரக்தி, ஆக்சிஜன் தேவை, தெருவில் சாவு இவையெல்லாம் இல்லை.. ஆனால் கொரோனா தொற்றில் மேலே சொன்ன அனைத்தும் நிச்சயம் உண்டு.. அதற்கு மேலேயும் உண்டு.. பத்து கோடி மக்கள் தெருவில் குடும்பத்தோடு இடம் பெயர்தல், குடும்பத்தில் சோகம், மனஅழுத்தம், தற்கொலைகள்.. இவளவு இருந்தும் தொற்று நோய் தடுப்பூசிக்கு விலை கட்டுப்பாடு இல்லை. சக்கரை வியாதி ஊசி போட்டுக்க ஆதார் அட்டை தேவையில்லை. தேவையற்ற செயலியில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இவையெல்லாம் பெருந் தொற்று நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான கட்டுப்பாடுகள்.. இந்த சின்ன வித்தியாசத்தை தெரிஞ்சிக்க ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையில்லை. இந்துத்துவா சித்தாந்தம் தேவையில்லை.. இந்திய மக்களின் மேல் கிஞ்சித்தேனும் அக்கறை இருந்தால் போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X