பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்: சீரம் அதிகாரி பகீர்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 'நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், 'தேவையான

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.



latest tamil news


'நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், 'தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை' என, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.


latest tamil news


இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், ''இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202106:47:12 IST Report Abuse
Saikumar C Krishna முதலில் நான் மருத்துவர்கள், நர்ஸ்கள், முன்கள பணியாளர்கள், எங்கள் உயிர்களை காப்பாற்ற பேராடும் அரசு இயந்திரங்கள் அனைவருக்கும் என் மற்றும் என் குடும்பத்தார் அனைவரின் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்நாட்டில் வகை தொகை யில்லாமல் பிறந்து விட்டோம். பிறகு எதிலும் தட்டுபாடு வர தான் செய்யும். முதலில் ஜன தொகையை குறைப்போம். பிறகு எல்லாம் எல்லோருக்கும் தட்டுபாடின்றி கிடைக்கும்.
Rate this:
வரிசெலுத்தும் மூடன்இந்தியா சந்திக்கும் அனைத்து சவால்களுக்கும் மூலக் காரணம் என்ன என்பதை உணர்ந்த ஒருவர் திரு Sasikumar அவர்கள் மட்டுமே....
Rate this:
Cancel
03-மே-202119:46:44 IST Report Abuse
ஆப்பு சில மாதங்களுக்கு தட்டுப்பாடு இருக்கும். அப்புறம் அதுவே பழகிப்போயிடும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-மே-202118:37:59 IST Report Abuse
தமிழவேல் 4 லட்சத்தை தாண்டிவிட்டது // கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில்,............... //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X