அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபதத்தை நிறைவேற்றியுள்ளோம்: பா.ஜ., முருகன் பெருமிதம்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில் 4 பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பார்கள் என்று தான் கூறிய சபதத்தை நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும்,
Tamilnadu, BJP, Murugan, Candidates, Win, Assembly Election, தமிழகம், சட்டசபை, தேர்தல், பாஜக, பாஜ, முருகன், சபதம்

சென்னை: சட்டசபை தேர்தலில் 4 பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பார்கள் என்று தான் கூறிய சபதத்தை நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ., மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை. நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துகளை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 2021ல் பா.ஜ., சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது. 1996ல் ஒருவரும், 2001ல் நான்கு பேரும் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்கள். இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 4 உறுப்பினர்களை பா.ஜ., பெற்றிருக்கிறது.


latest tamil newsதமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரங்கள் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாஜ., தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டசபையில் கடுமையாக உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பா.ஜ., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மே-202116:46:01 IST Report Abuse
Malick Raja ஒரு கிராம் தங்க காசுடன் ரூ 5000 கொடுத்து ஓட்டுக்கள் பெற்றது யார் என்று உலகமே அறியும் ..பிடிபட்ட அன்று தலைவரின் படம் கட்சி கொடி காண்பிக்கப்பட்டு கட்சியின் பெயர் வெளியியிடப்படவில்லை .. இதல்லாம் சகஜமப்பா ..
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மே-202114:50:57 IST Report Abuse
vigneshh 4 seat காக AIADMK அயே காவு கொடுத்தீர்கள்.
Rate this:
Cancel
04-மே-202111:54:54 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam இந்த நாலு இடத்தில் வெற்றி பெற வழுவான கூட்டணி,கோடிகளில் பணம், பிரதமர், உள்துறை அமைச்சர் என பல பிறபலங்களின் பரப்புரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X