பொது செய்தி

இந்தியா

கொரோனா சூழலில் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் மோதல் போக்கு வலுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து கடந்த ஏப்., 26ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அப்போது தேர்தல் பிரசார பேரணிகள் நடைபெற்று வந்ததால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்ற

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் மோதல் போக்கு வலுத்துள்ளது.


latest tamil news



கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து கடந்த ஏப்., 26ம் தேதி தமிழக தேர்தல் கமிஷனை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அப்போது தேர்தல் பிரசார பேரணிகள் நடைபெற்று வந்ததால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'இதை அனுமதித்த தேர்தல் கமிஷன் மீது கொலை குற்ற வழக்கு சுமத்தினால் கூடத் தவறில்லை' என, காட்டமாக தெரிவித்திருந்தனர். நீதிபதிகளின் இந்த அறிக்கையால் தேர்தல் கமிஷன் கடும் அதிருப்தி அடைந்தது.


latest tamil news



கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தை நாடியது. தங்கள்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சென்னை உயர் நீதிமன்றம் சுமத்துவதாக தேர்தல் கமிஷன் கூறி இருந்தது. மேலும், 'கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையே தவிர தேர்தல் கமிஷன் இதற்கு உதவ முடியாது. தேர்தல் கமிஷன் தொடர்ந்து மாநிலத்தில் தேர்தல் நடத்தும் பணிகளை செய்து வருகிறது' எனக் கூறியிருந்தது.



latest tamil news




தற்போது தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எம்.ஆர்.ஷா, சந்திராஷட் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கியுள்ளனர். அதில், 'மாநில உயர்நீதிமன்றங்களில் இந்த விஷயத்தில் எங்களால் குறைசொல்ல முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலசமயங்களில் தர்மசங்கடமான கேள்விகளை கேட்க நேரிடலாம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் அவர்கள் தேர்தல் கமிஷனை இவ்வாறு கேட்டிருக்கலாம். ஊடகங்கள் உயர் நீதிமன்ற அறிக்கைகளை சரியாக பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தக்க பதில் அளிக்கவேண்டும்' எனத் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-மே-202106:15:14 IST Report Abuse
D.Ambujavalli எங்கே, எத்தனை அறிவுரை, பெரிதாக கட்சி கொண்டாட்டங்கள் , கூட்டம் கூட வேண்டாம் என்று தலைவர் அறிக்கை விட்டாரே குன்னூரில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் கூட்டம் இதற்கு தலைவர் என்ன பதில் சொல்வாரோ?
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
03-மே-202120:32:58 IST Report Abuse
Ganesh G திமுக ஆட்சி பதவி ஏற்றுக்கொள்ளப்போகிறது. அதற்கான அறிகுறிகள்தான் இவை. இது சாம்பிள்தான். இனிமேல் தான் இருக்கு.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
03-மே-202120:29:25 IST Report Abuse
sankar தேர்தல் நடக்காத மஹாராஷ்டிரா & டெல்லி மாநிலங்களில் தான் கொரநா பாதிப்பு அதிகம் - சொன்னவர்கள் கொரானா பாஸ் பேர்வழிகளாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X