கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் பலி| Dinamalar

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் பலி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (4)
Share
பெங்களூரு: கர்நாடகாவில் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தை ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமான பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
Karnataka, Hospital, Oxygen Shortage, 24 Patients, Die, கர்நாடகா, மருத்துவமனை, ஆக்சிஜன், பற்றாக்குறை, நோயாளிகள், பலி

பெங்களூரு: கர்நாடகாவில் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தை ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமான பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பல மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் டில்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news



இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் மருத்துவ ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட, சிவயோக கலாசத் என்னும் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ள அம்மாநில முதல்வர் எடியூரப்பா, 3 நாட்களுக்கு அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X