பொது செய்தி

இந்தியா

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்கள்: சிவராஜ் சிங் சவுஹான், மம்தா பாராட்டு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
போபால்: கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த காலத்திலும், களத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை, 'முன்களப் பணியாளர்கள்' என, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மம்தா ஆகியோர் பாராட்டியுள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் தாக்கதை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி

போபால்: கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த காலத்திலும், களத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை, 'முன்களப் பணியாளர்கள்' என, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மம்தா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.



latest tamil news


இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் தாக்கதை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஏப்., 30 வரை ஊரடங்கு அறிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள இந்த காலத்திலும் களத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை, 'முதல்நிலை பணியாளர்கள்' எனப் பாராட்டியுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.


latest tamil news


இதேபோல், மேற்கு வங்கத்தில் வெற்றியடைந்து முதல்வராகவுள்ள மம்தா பானர்ஜியும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டியுள்ளார். மேலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரும் பத்திரிகையாளர்களை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202117:19:03 IST Report Abuse
ஆப்பு பத்திரிகையாளர்களைப் பிடிக்காத ஒருத்தரும் இருக்காரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X