பெண் சிப்பாய்களல்ல,சிங்கங்கள்.| Dinamalar

பெண் சிப்பாய்களல்ல,சிங்கங்கள்.

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1) | |
முதல் முறையாக இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் பணியாற்றப் போகும் நுாறு பெண்கள் வெற்றிகரமாக தங்களது கடந்த வாரம் முடித்துள்ளனர்.நமது ராணுவத்தில் கப்பல் மற்றும் விமான படையில் பெண்கள் பணியாற்றுகின்றனர் ஆனால் சிப்பாய் பிரிவில் இல்லை.எதிரிகள் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தாலும் சரி உள்ளே இருந்து முளைத்தாலும் சரி அவர்களை முறியடிப்பதில் முன்கள வீரர்களைlatest tamil news


முதல் முறையாக இந்திய ராணுவ சிப்பாய் பிரிவில் பணியாற்றப் போகும் நுாறு பெண்கள் வெற்றிகரமாக தங்களது கடந்த வாரம் முடித்துள்ளனர்.
நமது ராணுவத்தில் கப்பல் மற்றும் விமான படையில் பெண்கள் பணியாற்றுகின்றனர் ஆனால் சிப்பாய் பிரிவில் இல்லை.
எதிரிகள் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தாலும் சரி உள்ளே இருந்து முளைத்தாலும் சரி அவர்களை முறியடிப்பதில் முன்கள வீரர்களை இருப்பவர்கள் நமது சிப்பாய்களே.


latest tamil news


காஷ்மீர் போன்ற இடங்களில் திடீரென பெண்கள் ராணுவத்திற்கு எதிராக திருப்பிவிடப்படும் போது அவர்களை ஆண்களாக இருக்கும் ராணுவத்தினர் சமாளிப்பது ஒரு சவாலான விஷயமாக இருந்தது.இது போன்ற நேரங்களில் நமது ராணுவத்தில் பெண்கள் பிரிவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ராணுவ அதிகாரிகளின் ஆலோசனையை பிரதமர் மோடி ஏற்றதை அடுத்து முதல் கட்டமாக நுாறு பெண்களை சிப்பாய் பிரிவில் சேர்க்கும் நடவடிகை துவங்கியது.


latest tamil news


Advertisement

18 லிருந்து 21 வயதிற்குள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து 2 லட்சம் பெண்கள் ராணுவத்தில் பணியாற்ற விண்ணப்பித்தனர்.தகுதி அடிப்படையில் நாடு முழுவதும் இருந்து நுாறு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


latest tamil news


இவர்களுக்கு 62 வாரங்கள் பெங்ளூருவில் உள்ள மிலிட்டரி பள்ளியில் கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது.காலை 5:20 மணிக்கு ஆரம்பிக்கும் பயிற்சி இரவு 7:40 ற்குதான் முடியும்.தலைமுடி ஆண்களைப் போல வெட்டப்பட்டது, மொபைல் போன் கிடையாது ,வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடும்பத்தாருடன் பேச அனுமதி என்ற எல்லா ராணுவ கட்டுப்பாடுகளுடனும் நடந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.


latest tamil news


கயிற்றைப் பிடித்து ஏறுவது அதில் பாலம் கட்டி நடப்பது ,துப்பாக்கிகளை இயக்குவது,முள்வேலிகளுக்குள் ஊர்ந்து செல்வது கனமான ஆயுதங்களை சுமந்தபடி ஓடுவது உள்ளீட்ட ஆண்களுக்கான அதே பயிற்சிகளை இவர்களும் எடுத்துக் கொண்டனர்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இவர்கள் வருகின்ற மேமாதம் பணியில் அமர்த்தப்படுவர் இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் வருடத்திற்கு நுாறு பேர் என்று 1700 பெண்கள் இந்த படை பிரிவில் இருப்பர்.ஆண் சிப்பாய்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் சலுகை பதவி உயர்வு எல்லாம் வழங்கப்படும்.


latest tamil news


பயிற்சி முடித்து ராணுவ உடையில் கம்பீரத்துடன் வீட்டிற்கு வந்த தங்கள் மகள்கைள பார்த்ததும் சட்டென அடையாளம் தெரியாமல் திணறிப்போன குடும்பத்தார் பின்னர் நாட்டிற்கு ஒரு வீரமகளை கொடுத்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.
விவசாயியாக,விஞ்ஞானியாக,மருத்துவராக,செவிலியராக,ஆசிரியையாக என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்கள் இந்த சிப்பாய் படை பிரிவிலும் சாதிப்பர் என்பது நிச்சயம்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X