அரசியல் செய்தி

தமிழ்நாடு

எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை: சத்யபிரத சாஹூ

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கோராததால், மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. மே 7ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக
Tamilnadu, ElectionCommission, SathyaPradhaSahu, ReCounting, தமிழகம், தேர்தல் ஆணையம், சத்யபிரதா சாஹூ, மறு ஓட்டு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கோராததால், மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. மே 7ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: சட்டசபை பொதுத்தேர்தல் மிகவும் சவாலானதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்றப்பின் இன்று மாலை கவர்னருக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.


latest tamil news



தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கோரவில்லை. எனவே, மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை. எம்.பி.,க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
04-மே-202108:08:57 IST Report Abuse
rajan_subramanian manian இவர்கள் ஈவிஎம் பற்றி பேசிய பேச்சு கொஞ்சமா நஞ்சமா.?இப்போது பப்ளிக் ஆக மன்னிப்பு கேட்பார்களா?
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) நீதிமன்றம்ன்னு ஒன்னு இருக்கு நீங்க அதுக்கு கட்டுப்பட்டே ஆகணும்.
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
03-மே-202117:36:13 IST Report Abuse
Karthik //எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை// அதேபோல எந்த இடத்திலும் வாக்கு எந்திரம் குளறுபடியோ, பழுதோ, எண்ணிக்கைக் குறைவோ, cyber குற்றமோ நடக்கவில்லை. தி.மு.க தோற்றிருந்தால் இதெல்லாம் ஒரு பெரிய செய்தியாக வந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X