கேரள வரலாற்றில் முதல் முறை: முதல்வராக மாமனார்; எம்.எல்.ஏ.,வாக மருமகன்!

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார். கேரள சட்டசபைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார்.



latest tamil news


கேரள சட்டசபைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரள சட்டசபையில் கடந்த காலங்களில் தந்தை - மகன், தந்தை - மகள் என, சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.,க்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டசபைக்குள் வருவது இதுதான் முதல் முறை.


latest tamil news


கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் முகமது ரியாஸ் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.

பாலா தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணியில் இருந்த கேரள காங்கிரஸ் மாணி கட்சியின் தலைவர் ஜோஸ் கே.மாணி, திரிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோஸ் கே.மாணியின் மைத்துனர் எம்.பி.ஜோஸப் இருவரும் தோல்வி அடைந்தனர். கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோஸப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
04-மே-202115:37:02 IST Report Abuse
S.P. Barucha அரசியல் இந்தியாவில் பரம்பரை வியாதி.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
04-மே-202112:51:42 IST Report Abuse
Jayvee இரு வாதிகள்.. ஒருவர் தீவிர இஸ்லாமிய கட்சி .. இன்னொருவர் தீவிர சீன அடிமை கட்சி.. இவர்களுக்கு இடையே பண்ட மாற்று முறையில் இருந்தது வீனா என்கிற வீணாப்போன அபலை
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-மே-202108:33:17 IST Report Abuse
சீனி திராவிட பாரம்பரியத்தை கட்டிக்காப்பதுறாரு... கட்சியில கூஜா தூக்க 4 பேர் இருந்தா போதும், அவனே நம்ம குடும்பத்த வளர்த்து விட்டுடுவான், இல்லன்னா எல்லா நிதிகளும் உழைக்காமலே உள்ளே வரமுடியுமா ? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X