கொரோனாவிற்கு பலியானா ‛மிஸ்டர் இந்தியா'

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021
Share
Advertisement
ஜெகதீஷ் லாட்மகராஷ்ட்ரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்,சிறு வயது முதலே தன் உடல் மீது தீராக்காதல் கொண்டவர்.எப்போதும் ஜிம்மில் இருந்தபடி தனது உடலை செதுக்கிக் கொண்டே இருப்பார்.இதன் காரணமாக பலவித ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தார்.மகராஷ்ட்ரா மாநிலத்தின் சார்பாக கலந்து கொண்டு மிஸ்டர் இந்தியா பதக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் பெற்றார்.இதன்



latest tamil news


ஜெகதீஷ் லாட்
மகராஷ்ட்ரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்,சிறு வயது முதலே தன் உடல் மீது தீராக்காதல் கொண்டவர்.
எப்போதும் ஜிம்மில் இருந்தபடி தனது உடலை செதுக்கிக் கொண்டே இருப்பார்.இதன் காரணமாக பலவித ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தார்.
மகராஷ்ட்ரா மாநிலத்தின் சார்பாக கலந்து கொண்டு மிஸ்டர் இந்தியா பதக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் பெற்றார்.


latest tamil news


இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி ஒரு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
ஆனால் இந்த பெருமையால் இவருக்கு வருமானமோ வேலை வாய்ப்போ கிடைக்கவில்லை. ஒரு பக்கம் நிரந்தர வருமானம் இல்லாமலும் இன்னோரு பக்கம் நிறைய செலவு செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் முடியாலும் சிரமப்பட்டார்.
இந்த பொருளாதார சிக்கல், மனைவி குழந்தை என்றானபிறகு அதிகமானது, தொடர்ந்து சொந்த ஊரில் வெறும் பெருமையுடன் உலா வரமுடியாத சூழ்நிலையில் குஜராத்திற்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்.
அங்கே ஒரு ஜிம்மில் ‛டிரெய்னராக' இருந்து வருபவர்களுக்கு உடற்பயிற்சியை சொல்லிக்கொடுத்தார், கொரோனா காரணமாக மூடச்சொன்னதில்‛ ஜிம்மும்' ஒன்றானபின் கிடைத்த அந்த சொற்ப வருமானமும் நின்று போனது.
வாடகை கூட கொடுக்கமுடியாமல் சிரமப்பட்டார், இந்த நிலையில் இரும்பு போன்ற அவரது உடலையும் கொரோனா வைரஸ் ஊடூருவியது.
உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இவர் தனது உடம்புக்கு எதுவும் வராது, கொரோனா சும்மா சீண்டிப்பார்த்து உள்ளது. இரண்டொரு நாளில் வீட்டிற்கு வந்துவிடுவேன், எல்லா பிரச்னையையும் சமாளித்து மீண்டுவிடுவோம் என்று மனைவியிடம் கூறியிருக்கிறார்.ஆனால் அன்று இரவே மூச்சுத்திணறல் அதிகமாகி இறந்துவிட்டார்.
அகிலமே போற்றிய ஆணழகன் முப்பத்து நான்கு வயதில் யாரும் பார்க்கக்கூடாத பிணமாகிப் போய் மாநகராட்சியால் எரித்து சாம்பலாக்கப்பட்டார். கொரோனா இன்னும் எப்படி எல்லாம் கோராத்தாண்டவமாட இருக்கிறதோ?
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X