சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 03, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்நீல நிற கோள்சூரிய குடும்பத்தில் உள்ள எட்டாவது மற்றும் துாரத்தில் உள்ள கோள் நெப்டியூன். சுற்றளவு அடிப்படையில் நான்காவது பெரியகோள். சூரியன் - நெப்டியூன் இடையேயான துாரம் 450 கோடி கி.மீ. இது நீல நிறக்கோள் என அழைக்கப்படுகிறது. இது 1846 செப்., 23ல் ஜோஹான் காலே மற்றும் யுர்பெய்ன் லீ வெர்ரீயர் இணைந்து கண்டுபிடித்தனர். சூரியனை ஒரு முறை சுற்றி வர 164 வருடங்கள்

அறிவியல் ஆயிரம்
நீல நிற கோள்

சூரிய குடும்பத்தில் உள்ள எட்டாவது மற்றும் துாரத்தில் உள்ள கோள் நெப்டியூன். சுற்றளவு அடிப்படையில் நான்காவது பெரியகோள். சூரியன் - நெப்டியூன் இடையேயான துாரம் 450 கோடி கி.மீ. இது நீல நிறக்கோள் என அழைக்கப்படுகிறது. இது 1846 செப்., 23ல் ஜோஹான் காலே மற்றும் யுர்பெய்ன் லீ வெர்ரீயர் இணைந்து கண்டுபிடித்தனர். சூரியனை ஒரு முறை சுற்றி வர 164 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. இது எப்பொழுதும் -346 டிகிரி வெப்ப நிலையிலேயே உறைந்து இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான கோள் எனவும் அழைக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்
நீளமான ஏரி

கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி, இந்தியாவின் நீளமான ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 2114 சதுர கி.மீ. ஆலப்புழா, கோட்டயம், கொச்சி மாவட்டங்களில் பரவி உள்ளது. இதில் படகு போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. இதன் அதிகபட்ச நீளம் 96.5 கி.மீ. அதிகபட்ச அகலம் 14 கி.மீ. அதிகபட்ச ஆழம் 39 அடி. இந்த ஏரியில் பதிரமானல், பெரும்பாலம், பல்லிபுரம் போன்ற தீவுகள் உள்ளன. இதில் உள்ள படகு வீடுகள், சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. பெரியாறு, பம்பா, மீனச்சில் போன்ற ஆறுகள் இதில் கலக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X