பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 20,935பேருக்கு கொரோனா: 122 பேர் உயிரிழப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 20,935பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 122பேர் உயிரிழந்து உள்ளனர். 18,016பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,41,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20,652பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,16பேர் வெளிமாநிலங்களை

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 20,935பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 122பேர் உயிரிழந்து உள்ளனர். 18,016பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,41,021 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20,652பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,16பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், 20,935பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,28,064ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,28,97,963மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 12,345பேர் ஆண்கள், 8,607பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,41,495ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,86, 531 ஆகவும் அதிகரித்து உள்ளது.

18,016பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,90,338 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 122பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,46பேர் தனியார் மருத்துவமனையிலும், 76பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202103:30:28 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் இ.பி.எஸ் ஆட்சியில் பிடிச்ச கொரோனா. ஸ்டாலின் இன்னும் பதவியே ஏற்கவில்லை. பேசாம பழியை தலமை செயலர், சுகாதார இயக்குனர், மற்றும் அதிகாரிகள் மேலே போட்டுரலாம்.
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
03-மே-202120:28:08 IST Report Abuse
Ganesh G ஸ்டாலினின் ஆட்சியில் தமிழகத்தில் 21000 ஐ நெருங்குகிறது கொரோனா. ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X