அவசர பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : மே 04, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, அவசர பயன்பாட்டிற்கு, உபரியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா சிகிச்சை தொடர்பாக தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வசிப்பிடச் சான்றிதழ்இந்த வழக்கில், நேற்று அமர்வு
 அவசர பயன்பாடு, ஆக்சிஜன், அரசு, சுப்ரீம் கோர்ட் ,உத்தரவு

புதுடில்லி:'மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, அவசர பயன்பாட்டிற்கு, உபரியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா சிகிச்சை தொடர்பாக தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வசிப்பிடச் சான்றிதழ்இந்த வழக்கில், நேற்று அமர்வு பிறப்பித்தஉத்தரவு:கொரோனா இரண்டாவது அலை, தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் இருந்து மக்களை காக்க வேண்டிய இமாலய பொறுப்பு, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள், அவசர கால பயன்பாட்டிற்கு என, உபரியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

எதிர்பாராத தேவையின் போது, அவற்றை பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரே இடத்தில் வைக்காமல், பரவலாக, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பும் வசதி உள்ள இடங்களில் இருப்பு வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இருப்பு குறைவதற்கு ஏற்ப, உடனடி யாக ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்ப வேண்டும். இதையும், தினசரி ஒதுக்கீட்டையும், ஒவ்வொரு மாநிலமும், இணையம் வாயிலாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அரசு, இரு வாரங்களில், தேசிய கொள்கையை அறிவிக்க வேண்டும். அதுவரை, எந்தவொரு நோயாளிக்கும், வசிப்பிடச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை இல்லாத பட்சத்திலும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. சுதந்திரம்கொரோனா சிகிச்சை தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் புகார்களை முடக்கவோ அல்லது மருத்துவ உதவி கோருவோரை துன்புறுத்தவோ கூடாது.

அவ்வாறு செய்வோர் மீது நீதிமன்றம், கடும் நடவடிக்கை எடுக்கும். இதை, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு, மத்திய, மாநில அரசுகள், தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவின் நகலை, அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும், உச்ச நீதிமன்ற பதிவாளர் அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:கொரோனா தடுப்பூசி மருந்தை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே விலை வித்தியாசம் உள்ளது. இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு எதிராக உள்ளது. அத்துடன், தனிநபர் வாழ்வுரிமை, சுதந்திரம் ஆகியவற்றையும் பாதிக்கிறது. எனவே, தடுப்பூசி மருந்து கொள்கை குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
04-மே-202110:03:52 IST Report Abuse
pattikkaattaan நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் 24 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் மருத்துவமனையில் இறந்திருக்கிறார்கள் .. என்ன கொடுமை சார் இது ... ரொம்ப வேதனையா இருக்கு .. கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும் அதை செயல்படுத்துவது மத்திய , மாநில அரசுகள்தான் ... அவர்கள் தேர்தல் வரும்போது மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்வதுபோல காட்டிக்கொள்கிறார்கள் ..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-மே-202104:18:28 IST Report Abuse
blocked user "சுதந்திரம் கொரோனா சிகிச்சை தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் புகார்களை முடக்கவோ அல்லது மருத்துவ உதவி கோருவோரை துன்புறுத்தவோ கூடாது" - அவை பொய்யாக இருக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சொல்ல நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202101:20:58 IST Report Abuse
தல புராணம் சக்கரை வியாதி மருந்துக்கு விலை கட்டுப்பாடு உண்டு.. ஆனால் பெருந் தொற்று தடுப்பூசிக்கு விலை கட்டுப்பாடு கிடையாது. சக்கரை நோயால் ஊரடங்கு, தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, பசி, கல்வி நிலையங்கள் மூடல், தொழிற்சாலைகள் மூடல், நிரந்தரமற்ற வாழ்க்கை, விரக்தி, ஆக்சிஜன் தேவை, தெருவில் சாவு, ஊரெல்லாம் சுடுகாடு என்ற பேரழிவுகள் இல்லை.. ஆனால் கொரோனா தொற்றில் மேலே சொன்ன அனைத்தும் நிச்சயம் உண்டு.. அதற்கு மேலேயும் உண்டு.. பத்து கோடி மக்கள் தெருவில் குடும்பத்தோடு இடம் பெயர்தல், குடும்பத்தில் சோகம், மனஅழுத்தம், தற்கொலைகள்.. இவ்வளவு இருந்தும் தொற்று நோய் தடுப்பூசிக்கு விலை கட்டுப்பாடு இல்லை - உபயம் காற்பரெட்டு கோடீஸ்வரர்களின் ஆப்த நண்பர் மோடி. சக்கரை வியாதி ஊசி போட்டுக்க ஆதார் அட்டை தேவையில்லை. தேவையற்ற செயலியில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இவையெல்லாம் பெருந் தொற்று நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான கட்டுப்பாடுகள்.. இந்த சின்ன வித்தியாசத்தை தெரிஞ்சிக்க ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையில்லை. இந்துத்துவா சித்தாந்தம் தேவையில்லை.. இந்திய மக்களின் மேல் கிஞ்சித்தேனும் அக்கறை இருந்தால் போதும். கையை தூக்கினால், வெளியே வந்தால், இந்தியாவில் இருக்கிற அனைவருக்கும் கேட்காமலேயே இலவசமாக தடுப்பூசி போடுங்கள். தடுப்பூசி ஏற்றுமதியை ஒரு வருடம் தடை செய்யுங்கள். மேலும் தேவைக்கு இறக்குமதி செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X