மாமனார் முதல்வர்: மருமகன் எம்.எல்.ஏ.,

Added : மே 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரள சட்டசபை தேர்தலில், முதல்வர் பினராயி விஜயனும், அவரது மருமகன் முகமது ரியாசும் வெற்றி பெற்றுஉள்ளனர். கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், தர்மதம் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவரது மகள் வீணாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த, ஜனநாயக இளைஞர் பேரவை தலைவர் முகமது ரியாஸ், 44, பேபோர் தொகுதியில்
 மாமனார் முதல்வர்: மருமகன் எம்.எல்.ஏ.,

திருவனந்தபுரம்:கேரள சட்டசபை தேர்தலில், முதல்வர் பினராயி விஜயனும், அவரது மருமகன் முகமது ரியாசும் வெற்றி பெற்றுஉள்ளனர்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், தர்மதம் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவரது மகள் வீணாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த, ஜனநாயக இளைஞர் பேரவை தலைவர் முகமது ரியாஸ், 44, பேபோர் தொகுதியில் வென்றுள்ளார். இவர், 2009 லோக்சபா தேர்தலில், கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தவர்.

இம்முறை கேரள சட்டசபைக்கு, மாமனாருடன் சேர்ந்து வர உள்ளார். கேரளாவில் இதுபோல, முதல்வரும், மருமகனும் சட்டசபைக்குள் நுழைவது இதுவே முதன் முறை.கேரள சட்டசபை தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில், முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோரின், 20க்கும் மேற்பட்ட வாரிசுகள் போட்டியிட்டனர்.

கேரள காங்., தலைவர், பி.ஜே.ஜோசப் வெற்றி பெற்ற நிலையில், அவரது மருமகன் ஜோசப், கொத்தமங்கலம் தொகுதியில் தோல்வி அடைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர், கருணாகரனின் மகன், கே.முரளிதரன், மகள் பத்மஜா ஆகியோர் தோல்வி அடைந்தனர். கேரள எம்., காங்., தலைவர் ஜோஸ் மாணி, அவரது சகலை ஜோசம் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.


பினராயி விஜயன் ராஜினாமா

கேரள சட்டசபை தேர்தலில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி, 99 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, பினராயி விஜயன், நேற்று, கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்தார். அதை ஏற்ற கவர்னர், புதிய அரசு அமைக்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க, பினராயி விஜயன் உரிமை கோரியதும், கவர்னர், அவருக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:04:19 IST Report Abuse
Jayvee மாமனார் சீன அடிமை.. மருமகன் சவுதியின் அடிமை..
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
04-மே-202122:03:41 IST Report Abuse
bal இங்க தமிழ் நாட்டில் என்னவாம்...அப்பன், பிள்ளை, மாமா, சித்தி, ஓர் பெரிய MLA கூட்டு குடும்பமா இருக்கு...குவாட்டர், பிரியாணி, துட்டு, பொய் இதுதான் தமிழக மக்கள் தலைவிதி.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
04-மே-202115:23:51 IST Report Abuse
Indhuindian இனிமேல் தங்க கடத்தல் அமோகமா நடக்கலாம் எப்பிடியும் சட்டப்படி சரியோ தவறோ சி பி ஐ மாநிலத்துள்ளே கால் வைக்ககூடதுன்னு அரசு ஆணை வெளியிடுவாங்க ஏற்கனவே சந்திர பாபு நாயுடு, மமதை தீதி, கமல்நாத் இவங்கல்லாம் பண்ணலயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X