சில வரி செய்திகள்...இந்தியா

Added : மே 03, 2021
Share
Advertisement
பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசிபோபால்: 'அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள், முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அதன்படி, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. துவங்கியது பணிபுதுடில்லி : கொரோனா தடுப்பூசியை, 18 - 44
 சில வரி செய்திகள்...இந்தியா

பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி

போபால்: 'அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள், முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அதன்படி, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

துவங்கியது பணி

புதுடில்லி : கொரோனா தடுப்பூசியை, 18 - 44 வயதுக்குட்பட்டோருக்கு வழங்கும் பணி, டில்லியில் துவங்கியது. மொத்தம், 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, 77 பள்ளிகளில், தலா, ஐந்து தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாக்., அத்துமீறல்

புதுடில்லி: எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதாக, இந்தியா, பாகிஸ்தான் ராணுவம், பிப்., 25ல் அறிவித்தன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக, பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

கேரளா காங்., தலைவர் மரணம்

கொல்லம்: கேரளா காங்கிரஸ் - பி - தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான, ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை, 86, உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். சி.அச்சுத மேனன், கே.கருணாகரன், ஈ.கே. நாயனார், ஏ.கே.அந்தோணி ஆகியோர் முதல்வராக இருந்தபோது, பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார். காங்.,கில் இருந்து விலகி, கேரளா காங்., கட்சியை துவக்கினார். இவரது மகனும், முன்னாள் அமைச்சருமான கணேஷ் குமார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றார்.

நாக்பூருக்கு கொரோனா ரயில்

மும்பை : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளோரை தனிமைப்படுத்துவதற்காக, ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் நகராட்சிக்காக, 11 ரயில் பெட்டிகளை, மத்திய ரயில்வே அனுப்பியுள்ளது. ஒரு பெட்டியில், 16 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X