சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இப்படி ஒரு அமைச்சரா?

Added : மே 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இப்படி ஒரு அமைச்சரா?'இந்தக் காலத்திலும், இப்படிப்பட்ட நல்ல அரசியல்வாதிகள் இருக்கத் தான் செய்கின்றனர்' என, மத்திய பிரதேச மாநில எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமரை கொண்டாடுகின்றனர், அங்குள்ள மக்கள். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ம.பி.,யும்


 அக்கம் பக்கம்


இப்படி ஒரு அமைச்சரா?


'இந்தக் காலத்திலும், இப்படிப்பட்ட நல்ல அரசியல்வாதிகள் இருக்கத் தான் செய்கின்றனர்' என, மத்திய பிரதேச மாநில எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமரை கொண்டாடுகின்றனர், அங்குள்ள மக்கள். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ம.பி.,யும் ஒன்று.ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாநில அரசு, என்ன செய்வது என தெரியாமல், விழி பிதுங்கிப் போயுள்ளது. இதனால், ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் ஸ்தம்பித்து விடக் கூடாது என்பதற்காக, பிரதுமன் சிங் தோமர் போன்ற சில அமைச்சர்கள் களத்தில் இறங்கிஉள்ளனர்.
ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ம.பி.,யில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, பிரதுமன் தோமர், உதவி கோரி வருகிறார். நிர்வாக சிக்கல்களைக் கூறி, தவிர்க்க நினைக்கும் தொழிற்சாலை அதிபர்களிடம், மண்டியிட்டு வணங்கி, 'ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பிரச்னை; எப்படியாவது உதவி செய்யுங்கள்' என, கெஞ்சி கேட்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிற்சாலை அதிபர்கள், வேறு வழியின்றி, ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர சம்மதம் தெரிவிக்கின்றனர். பிரதுமன் தோமரின் இந்த நெகிழ்ச்சியான நடவடிக்கைகள், சமூக வலைதளங்களில், 'வீடியோ'வாக பரவி வருகின்றன. இதைப் பார்த்த, ம.பி., மக்கள், 'இந்த மனிதர், நமக்காக இப்படி மண்டியிட்டு கெஞ்சுகிறாரே...' என, உணர்ச்சி வசப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202103:30:27 IST Report Abuse
தல புராணம் இல்லைன்னா லைஸென்ஸை பிடுங்கிடுவேன்னு சொன்னது கூட சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.. அதையும் கொஞ்சம் காட்டுங்க பாஸ்..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மே-202115:25:17 IST Report Abuse
Dr. Suriyaமக்களை காக்கும் நல்ல விஷயத்தில் உதவாமல் போனால் லைசென்ஸை பிடிங்கினாலும் தப்பில்லை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X