தேர்தல் கமிஷன் தொடர்ந்த வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் கமிஷன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்க்கும் வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.தடுப்பு நடவடிக்கை கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கான
 தேர்தல் கமிஷன் தொடர்ந்த வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் கமிஷன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்க்கும் வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


தடுப்பு நடவடிக்கை



கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.'தேர்தல் பிரசாரத்தின்போது, அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் தவறிவிட்டது.

விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் கமிஷன் மீது கொலை குற்றச்சாட்டை கூட பதிவு செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த, நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர். ஷா அமர்வு உத்தரவிட்டதாவது:

நீதிமன்றத்துக்குள் நடக்கும் விவாதத்தை, ஊடகங்கள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஆரோக்கியமான விவாதத்துக்கு உதவும் நடவடிக்கைகளை தடுக்கத் தேவையில்லை.தீர்ப்பு வழங்கப்படும்தேர்தல் கமிஷன் மிகச் சிறப்பாக செயல்பட்டு, வெற்றிகரமாக தேர்தலை நடத்தியுள்ளது. உங்களை மட்டம்தட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் கடுமையாக கூறியிருக்காது.

இது போன்ற கருத்துகளின் உள்அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில், சிறப்பாக செயல்பட்டும், விமர்சிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறும் வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் கமிஷன் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டும் அரசியலமைப்புச் சட்ட அமைப்புகள். இரண்டு அமைப்புக்கும் உரிமைகள், அதிகாரங்கள் உள்ளன. அதை ஈடு செய்யும் வகையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X