சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அனைவருக்கும் நன்றி!

Added : மே 03, 2021
Share
Advertisement
அனைவருக்கும் நன்றி!கு.அருணாச்சலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தமிழக வாக்காளர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதுவரை நடந்து முடிந்த, 15 சட்டசபைத் தேர்தல்களை பொறுத்தவரையில், 2006ம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்திலும், ஆட்சி அமைக்கும் கட்சிக்கு, தமிழக வாக்காளர்கள் அறுதி பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.கடந்த, 2006 தேர்தலில்,


அனைவருக்கும் நன்றி!கு.அருணாச்சலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தமிழக வாக்காளர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதுவரை நடந்து முடிந்த, 15 சட்டசபைத் தேர்தல்களை பொறுத்தவரையில், 2006ம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்திலும், ஆட்சி அமைக்கும் கட்சிக்கு, தமிழக வாக்காளர்கள் அறுதி பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.
கடந்த, 2006 தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான, 118 இடங்களைக் கொடுக்காமல், தி.மு.க.,வுக்கு, 100க்கும் குறைந்த தொகுதிகளில் வெற்றியை தந்தனர். காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., வெற்றிகரமாக ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தது. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பொருத்தவரையில், தி.மு.க., பெரும்பான்மை பெற்றுள்ளது. பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக
மாறுகிறது.தமிழகத்தை பொருத்தவரையில், தொங்கும் சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த, வாக்காளர்களுக்கு நன்றி. இதனால், எம்.எல்.ஏ.,க்களை விலை பேசும், 'குதிரை' பேரத்திற்கு வாய்ப்பு ஏற்படவில்லை என்ற வகையில் மகிழ்ச்சி அடைவோம். தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகும், தி.மு.க.,வுக்கு வாழ்த்துகள். மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகள் நல்லாட்சி தர, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும்.ஆட்சியில் அமர்ந்த பின், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என, பாகுபாடு காட்டாமல், அனைத்து மக்களுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றம் மட்டுமே மாறாதது; இது, அரசியலுக்கும் பொருந்தும். வெற்றி, தோல்வி என்பதும், நிரந்தரமானது இல்லை. ஐந்தாண்டுகள் கழித்து, மீண்டும் மக்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்பதை, ஆளுங்கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.தோல்வி அடைந்தோம் என மனம் தளராமல், தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக, சட்டசபையில், அ.தி.மு.க.,வினர் குரல் கொடுக்க வேண்டும்.நிலையான ஆட்சி அமைய ஓட்டளித்த, 72.68 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.


முடிச்சு போடாதீர்!ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலக அளவில் வெடித்துள்ளது, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை. அது, நம் நாட்டையும் பாடாய்படுத்தும் நேரத்தில், சில எதிர்க்கட்சிகள், வழக்கம் போல் மத்திய அரசை குறை சொல்கின்றன.'மகா மாரி' எனப்படும் இது போன்ற தொற்றுகள், உலகில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி, பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.கடந்த, 1720, 1820, 1920ல், காரணம் சொல்ல இயலாதவாறு, சில நோய்கள் தோன்றி, இரு ஆண்டுகள் பரவி, பெருத்த உயிர் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய பின்
மறைந்தன.இதற்கும், ஆண்டுகளின் எண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்னும் சிலர், தமிழ், தெலுங்கு ஆண்டுகளுக்கும், நோய் தொற்று பரவலுக்கும் முடிச்சுப் போடுகின்றனர். இது, ஆதாரமில்லாத, வேண்டாத வேலை. கடந்த, 'சார்வரி, பிலவ' ஆண்டுகளில், எந்த தொற்றும் பரவவில்லை. எனவே, மக்களிடையே தேவையற்ற பீதியை கிளப்பக் கூடாது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மத்திய - மாநில அரசுகள் உண்மையிலேயே நன்கு பணியாற்றி, மக்களை காக்க போராடுகின்றன. அதை பாராட்டி, உறுதுணையாக நிற்பதே, நம் அனைவரின் கடமை.அதை விடுத்து, 'மற்ற நாடுகளுக்கு, ஏன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தோம்; தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் தவறு' என்பது போன்ற விமர்சனங்கள் தேவையற்றவை.
இரண்டாம் அலை, இந்த அளவு கொடூரமாய் இருக்கும் என, யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முதல் அலையின்போது, பல நாடுகளுக்கு, நாம் உதவிக்கரம் நீட்டியதால் தான், இப்போது அந்நாடுகள் நமக்கு உதவி செய்கின்றன.கொரோனா இக்கட்டில் இருந்து, நம் நாடு விரைவில் மீண்டு வரும் என்பதில், எந்த ஐயமும் இல்லை. அதற்கு நாம் அனைவரும், அரசின்
நடவடிக்கைக்கு ஒத்துழைப் போம்.


புதுக்கணக்கு எழுதுங்கள் ஸ்டாலின்!அ.முகமது அலி, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்று தான், தமிழகத்தை ஆள வேண்டும் என்ற மாய வலையில், தமிழர்கள் சிக்கி உள்ளனர் என்பதையே, நடந்து முடிந்த தேர்தலும் எடுத்துக் காட்டியுள்ளது.முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'சால்ஜாப்பு' ஏதும் சொல்லாமல், தமிழகத்தின் நலனுக்காக, சில பணிகளை நிச்சயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.வர்த்தகம், வேலைவாய்ப்பு, கூலி தொழிலாளரின் வருமானம், கல்வி, மருத்துவம், ஆரோக்கியம், இளைஞர்களின் எதிர்காலம் என, அனைத்தும் தற்போது கேள்விக்குறியாக உள்ளன.கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா தடுப்பு தான், முதல்வர் ஸ்டாலினின் முதல் பணி.தொழிற்சாலைகள் முழு திறனுடன் இயங்க, மின் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்கக் கூடாது.வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் நுகர்பொருளாக மாற்றும் நிறுவனங்களை, கிராமத்தில்
நிறுவ வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமல், குப்பைக்கு செல்லும் நிலையை மாற்றி பழரசம், வாசனை திரவியம், உலர் பழமாக்கல் போன்ற மாற்று வழிகளை, தொழில்களை, கிராமத்து இளைஞர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு, ஆற்று மணல் கடத்தல், காடு அழித்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை, பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும். நீர்
மேலாண்மையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு நிர்வாகத்தை, 'டிஜிட்டல்' மயமாக்கினால், லஞ்சம் ஒழியும்; அதற்கான கட்டமைப்பை,விரிவுபடுத்த வேண்டும்.புதிய இலவசங்களை, அறிவிப்புகளை ஓராண்டு தள்ளி வைத்து, கல்வி, மருத்துவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.முந்தைய ஆட்சியின் குறைகளை சொல்லி, அடுத்த ஐந்து
ஆண்டுகளை கடத்தக் கூடாது. தன் திறமையை நம்பி, ஸ்டாலின் புதுக்கணக்கு எழுத வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X