சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பதுக்கிய பணத்தை செலவு செய்யும் கட்சி நிர்வாகிகள்!

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பதுக்கிய பணத்தை செலவு செய்யும் கட்சி நிர்வாகிகள்!''வசூலுக்காக அல்லாடிண்டு இருக்கா ஓய்...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், கபசுர குடிநீரை பருகியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,ல, பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கு... இதனால, ஒப்பந்த முறையில, தற்காலிக

 டீ கடை பெஞ்ச்


பதுக்கிய பணத்தை செலவு செய்யும் கட்சி நிர்வாகிகள்!


''வசூலுக்காக அல்லாடிண்டு இருக்கா ஓய்...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், கபசுர குடிநீரை பருகியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார்
குப்பண்ணா.

''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,ல, பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கு... இதனால, ஒப்பந்த முறையில, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டா ஓய்... இதுல சிலர், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் குடும்ப வாரிசுகள்... இவாள்ல சிலர், அதிகாரிகளின் லஞ்ச வசூலுக்கு புரோக்கர்கள் மாதிரியே செயல்பட்டா ஓய்...

''இப்ப, இந்த இடங்களுக்கு, 131 பேர் நிரந்தர பணியாளர்களா தேர்வாகிட்டா... இதனால, தற்காலிக பணியாளர்களை விடுவிக்க, உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டா ஓய்... இவாளை விடுவிச்சா, வசூல் பணிகள் பாதிக்குமோன்னோ... இதனால, தற்காலிக பணியாளர்களை தக்க வைக்க, வசூல் அதிகாரிகள், தலையால தண்ணி குடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கண்துடைப்புக்கு விசாரணை நடத்துறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்த விவகாரத்துலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர்ல ஒருத்தர், சமீபத்துல, தன் குடும்ப நண்பருக்காக, பத்திரப்பதிவு ஜாயின்ட் - 1 அலுவலகத்துல சில பத்திரங்களை, 'ஆன்லைன்'ல பணம் கட்டி, பதிவு செய்ய உதவி செய்தாருங்க... அன்னைக்கு, அந்த அலுவலகத்துல இருந்து, அவரை தொடர்பு கொண்டு பேசிய
உதவியாளர் ஒருத்தர், மறைமுகமா லஞ்சம் கேட்டாரு பா...

''இந்த ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்துச்சே... இதுல, அந்த அலுவலக உதவியாளரை பிடிச்சா, சார் - பதிவாளருக்கு சிக்கல் வரும்கிறதால, பத்திரத்தை பதிவு செய்தவரை தேடி பிடிச்சுருக்காங்க பா...

''அதுலயும், ஆடியோவுல பேசியவரை விசாரணைக்கு அழைக்காம, பத்திரத்தை பதிவு செய்த நண்பர் குடும்பத்தை, கோவைக்கு விசாரணைக்கு வாங்கன்னு அழைச்சிருக்காங்க... இந்த விஷயத்துல, பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்துடக் கூடாதுங்கிறதுல, உயர் அதிகாரிகள் தெளிவாகவே இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''யார் ஜெயிச்சா நமக்கென்ன... நம்ம ஜோலியை பார்ப்போம்னு, காரியத்துல இறங்கிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''எந்தக் கட்சியினரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கடலுார் மாவட்ட தேர்தல் களத்துல, தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சிகள் சார்புலயும், பணம் பெரிய அளவுல விளையாடுச்சு... ரெண்டு கட்சிகள் தரப்பும், வாக்காளர்களுக்கு, நிர்வாகிகள் வழியாக, பணத்தை வாரியிறைச்சாவ வே...

''இதுல பலரும் உள்கமிஷன் அடிச்சிட்டு, மிச்சம், மீதியை தான், வாக்காளர்கள் கண்ணுல காட்டுனாவ... இப்ப, தேர்தல் பரபரப்பு எல்லாம் முடிஞ்சதும், ரெண்டு கட்சி நிர்வாகிகளும், பதுக்கிய பணத்தை வெளியில எடுக்க ஆரம்பிச்சிட்டாவ...

''பலரும், தங்களது பழைய வீடுகளை புதுப்பிக்கிறது, 'கார், பைக்' வாங்குறது, வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குறதுன்னு, செலவு பண்ணிட்டு இருக்காவ வே...''
என்றார், அண்ணாச்சி.அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-மே-202106:32:08 IST Report Abuse
D.Ambujavalli கட்சி ஜெயித்த பின் இவர்களுக்கு ஒன்றும் பெரிதாக செய்யாமல், கமிஷன், ஒப்பந்த பேரம் என்று எம் எல் ஏக்கள் போய்விடுவார்கள் தோற்றால் காசுக்கு கணக்கு கேட்டு கோர்ட்டுக்கா போக முடியும்? அடித்த மட்டும் லாபம் இன்னும் ஐந்து வருஷத்தைக் கண்டவர்கள் யார் என்று ‘தூற்றிக்கொண்ட’ பணமெல்லாம் வெளி வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X