சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அரிய கலையை காப்பாற்ற வேண்டும்!

Added : மே 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பொம்மலாட்டக் கலை யின் தற்போதைய நிலைமை குறித்து, சேலம், சீரகப்பாடியில், 'ஜெ ராமவிலாஸ் நாடக சபா' என்ற குழுவை நடத்தி வரும் சென்னகிருஷ்ணன்: எங்க சொந்த ஊர், சேலம், பெரிய சீரகப் பாடி. என் தாத்தா செம்மலை தான், எங்க எல்லாருக்கும் குரு. அவர் காலத்தில் இந்தக் கலைக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. கிராமங்களில் கோவில் விழாக்கள் என்றால், என் தாத்தா தன் குழுவினரோடு, இரவு, 8:00 மணிக்கு
 அரிய கலையை காப்பாற்ற வேண்டும்!

பொம்மலாட்டக் கலை யின் தற்போதைய நிலைமை குறித்து, சேலம், சீரகப்பாடியில், 'ஜெ ராமவிலாஸ் நாடக சபா' என்ற குழுவை நடத்தி வரும் சென்னகிருஷ்ணன்: எங்க சொந்த ஊர், சேலம், பெரிய சீரகப் பாடி. என் தாத்தா செம்மலை தான், எங்க எல்லாருக்கும் குரு. அவர் காலத்தில் இந்தக் கலைக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. கிராமங்களில் கோவில் விழாக்கள் என்றால், என் தாத்தா தன் குழுவினரோடு, இரவு, 8:00 மணிக்கு ஆரம்பிக்கும் பொம்மலாட்டம் விடிய விடிய நடக்கும்.ஒருகட்டத்தில் சினிமா மோகம் மிகுந்து, இதற்கு இருந்த வரவேற்பு சற்றுக் குறையவே, வருமானத்துக்காக இவரிடம் இருந்த கலைஞர்கள், வேறு வேலை தேடிப் போயினர். என் அம்மா முத்துலெட்சுமிக்கு, தாத்தா இந்தக் கலையைக் கற்றுத் தந்தார். 23 வயதில், முதல் பெண்ணாகத் தனி நாடகம் நடத்திய பெருமை, என் அம்மாவையே சேரும். இன்று, 65 வயதுக்கு மேலானாலும், அம்மாவின் குரல் கணீரென்று இருக்கும். பொம்மைகளைப் பிடித்து இயக்கும் அவரின் வேகம் மலைக்க வைக்கும்.எங்கள் குடும்பமே தாத்தாவிடம் கலைகளைக் கற்று பயணித்தோம். 93 வயசு வரைக்கும் தாத்தா பொம்மலாட்டத்தை தன் உயிராக நினைத்து வாழ்ந்தார். இப்ப நாங்களும் இந்தக் கலையை நேசித்து நடத்துறோம்.கொரோனாவால், எல்லாருக்கும் தொழில் பாதித்தது போல, எங்கள் நிகழ்ச்சியும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் வருஷத்துக்கு எப்படியும் குறைந்தபட்சம், 50 நிகழ்ச்சிகளாவது நடத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த கொரோனா, எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறது; பத்து நிகழ்ச்சிகள் நடத்துறதே பெரும்பாடா இருக்கு. அதிக கூட்டம் கூடி ரசிக்கும் நிகழ்ச்சி இது என்பதால் கோவில் திருவிழாக்களில் இப்போதெல்லாம் வாய்ப்பு தருவதில்லை. கலை - பண்பாட்டுத் துறை சார்பில் உதவிகள் கிடைக்குது.

ஊரடங்கின் போது எங்களை மாதிரி கலைஞர்களுக்கு அரசு உதவித் தொகை தந்தது உபயோகமா இருந்தது. மீண்டும் பழைய நிலை திரும்ப பெரிதளவில் பாதிக்கப்பட்ட எங்களை மாதிரி கலைஞர்கள் வேண்டுகிறோம்.இந்தச் சமூகம் விரும்பும் என்பதற்காக, எங்கள் நாடகங்களின் உண்மைத் தன்மையை மாற்றுவதில்லை. பழமையை அப்படியே வழங்கு கிறோம். கிராமங்களில் பரவாயில்லை; விடிய விடிய அமர்ந்து எங்களை உற்சாகப்படுத்துவர்.

இந்தக் கலையைத் தொடர்ந்து செய்யும் வலிமையை ஆண்டவன் எங்களுக்குத் தந்திருக்கிறான். 20 கிலோ பொம்மைகளை உருவாக்கி அவற்றைப் பாதுகாத்துச் சுமக்கும் பாக்கியம் தியானத்திற்கு ஒப்பானது. யோகக் கலைக்கு ஒப்பான இக்கலை, எங்கள் உடல் நலமும் மனநலமும் பேண உதவுகிறது. இக்கலை அழிந்து விடக்கூடாது என்று போராடி வருகிறோம். வாய்ப்புகளுக்காக வருந்தாமல் கிடைப்பதை ஏற்கிறோம். இந்தக் கலையை அழியாமல் காக்க, இளைய தலைமுறை முன்வர வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
04-மே-202115:32:05 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வாழ்க வளமுடன் இறைவன் அருள் புரியட்டும்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202103:28:44 IST Report Abuse
தல புராணம் எமது கலைகளை பாதுகாக்கும் இவர்கள் போன்றவர்கள் தான் நமது அடையாளங்களை பாதுகாக்கும் காவலர்கள்.. அரிய கலைகளை போற்றுவது மட்டுமல்லாமல், அதை வைத்து ஜீவனம் நடத்தும் குடும்பங்களுக்கு அரசு நலத்திட்டங்கள் மட்டுமின்றி 100% வாழ்வாதாரத்தையும் தயங்காமல் அள்ளிதரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X