அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் வீரமணி வீழ்ந்தது எப்படி?

Added : மே 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட அமைச்சர் வீரமணி, 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் தோல்விக்கான காரணம் தெரியவந்துள்ளது.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணி, தி.மு.க.,வில் தேவராஜ் என மொத்தம், 13 பேர் போட்டியிட்டனர். வீரமணி, தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வில்,
 அமைச்சர் வீரமணி வீழ்ந்தது எப்படி?

ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட அமைச்சர் வீரமணி, 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் தோல்விக்கான காரணம் தெரியவந்துள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணி, தி.மு.க.,வில் தேவராஜ் என மொத்தம், 13 பேர் போட்டியிட்டனர். வீரமணி, தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வில், 'டம்மி' வேட்பாளரான தேவராஜை, மறைமுகமாக தன் செல்வாக்கை பயன்படுத்தி, போட்டியிட செய்தார்.

வீரமணியிடம், 50 சதவீத டெண்டர் பணிகளை எடுத்து செய்து வந்தவர் தான் தேவராஜ். இதனால், தன்னை எதிர்த்து பணியாற்ற மாட்டார் என்பதால், தன் வெற்றி உறுதி என, வீரமணி நினைத்தார்.இந்நிலையில், வீரமணி 3,000 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கிக் குவித்ததாக, அ.ம.மு.க., வேட்பாளரும், அவரது சகோதரி மகனுமான சாம்ராஜ் ஆதாரத்துடன் கூறினார். இது குறித்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது.

தன்னை கட்சியை விட்டு நீக்க வீரமணி திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையெல்லாம் அறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பிரசாரத்துக்கு வந்தபோது, 'இம்முறை வெற்றி பெறாவிட்டால், மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்படும்' என கண்டிப்பு காட்டியதால், தேவராஜ் பிரசாரத்தில் தீவிரம்காட்டினார்.

அதிர்ச்சியடைந்த வீரமணி, பணத்தை வாரி இறைத்தார். ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் மற்றும் வேட்டி, சேலை, மூன்று மாதங்களுக்கு மளிகை பொருட்கள், குடும்பத்துக்கு ஒரு பைக், பெண்களுக்கு வெள்ளி கொலுசு என வாரி வழங்கினார்.பண பலத்தை மட்டும் முழுமையாக நம்பியதால், தி.மு.க.,வினரின் பிரசாரத்துக்கு வீரமணியால் ஈடு கொடுக்க முடியவில்லை.

மக்கள் மத்தியில், அவர் மீது இருந்த அதிருப்தி மற்றும் வீரமணியின் மருமகன் அ.ம.மு.க., வேட்பாளரின் எதிர்ப்பை தி.மு.க., அறுவடை செய்தது. வீரமணி தோல்வியடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:07:05 IST Report Abuse
Jayvee இந்த முறையும் வோட்டுக்கு பணம் கொடுத்துதான் தீயமுக மற்றும் அண்ணா தீயமுகவினர் இருவருமே ஜெயித்தார். பணம் வாங்கிகொண்டு தோத்து நின்றது சீமான் மற்றும் கே மலஹாசன்
Rate this:
Cancel
SATHIK BASHA - INDIA,இந்தியா
05-மே-202114:19:21 IST Report Abuse
SATHIK BASHA இதில் என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கு ? என்ன மஹாத்மா காந்தியா தோற்றார்?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-மே-202113:48:08 IST Report Abuse
கல்யாணராமன் சு. இவருக்கும் துரைமுருகனுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தமும் புரிதலும் இருப்பதாக செய்தி வந்ததே ..... துரைமுருகன் இவரை காப்பாற்ற ஒண்ணும் செய்யலியா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X