பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி 'ஆர்டர்' செய்யவில்லை என்ற தகவலுக்கு மறுப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வாங்குவதற்கு, மத்திய அரசு, புதிதாக, 'ஆர்டர்' செய்யவில்லை என வெளியான செய்திக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான, மேலும், 16 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் வாங்க பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக, உள்நாட்டில் தயாரிக்கப்படும், இரண்டு தடுப்பூசிகள்
தடுப்பூசி 'ஆர்டர்', தகவல், மறுப்பு ,மத்திய அரசு தகவல்

புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வாங்குவதற்கு, மத்திய அரசு, புதிதாக, 'ஆர்டர்' செய்யவில்லை என வெளியான செய்திக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அடுத்த
மூன்று மாதங்களுக்கு தேவையான, மேலும், 16 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் வாங்க பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக, உள்நாட்டில் தயாரிக்கப்படும், இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், 'மே 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் படும்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது.கொரோனா வைர பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளது.சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'ஜூலை வரை இந்தத் தட்டுப்பாடு இருக்கும். தடுப்பூசி உற்பத்திக்கு அதிக, 'ஆர்டர்' இல்லாததால், உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என, சீரம் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, அடார் பூனாவாலா கூறியிருந்தார்.
இதற்கிடையே, 'தடுப்பூசிகள் வாங்குவதற்காக, மார்ச் மாதத்துக்குப் பின், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசு எந்த, 'ஆர்டரும்' தரவில்லை' என, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை, மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தடுப்பூசிகள் வாங்குவதற்கு, மார்ச் மாதத்துக்குப் பின், எந்த ஆர்டரும் தரப்படவில்லை என்ற செய்தி அடிப்படை ஆதார மில்லாத, பொய் தகவல். சீரம் நிறுவனத்துக்கு, மார்ச் மாதத்தில், 10 கோடி, 'டோஸ்' தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, அதில், 8.744 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. மீதமுள்ளவை விரைவில் வந்து சேரும்.
கோவாக்சின் தடுப்பூசிகள், இரண்டு கோடி டோஸ் வாங்கவும், மார்ச்சில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை, 88 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்து சேர்ந்து உள்ளன.இதைத் தவிர, 11 கோடி டோஸ், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வாங்குவதற்காக, சீரம் நிறுவனத்துக்கு, 1,732 கோடி ரூபாய் மொத்தமாக முன்பணமாக, ஏப்., 28ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. மே, ஜூன், ஜூலை மாதங்களுக்காக இவை வாங்கப்படுகின்றன.அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து, ஐந்து கோடி டோஸ் தடுப்பூசிகள், மே, ஜூன், ஜூலை மாதத்துக்காக வாங்கப்படுகின்றன. இதற்காக, 787 கோடி ரூபாய் பணம், மொத்தமாக முன்பணமாக, ஏப்., 28ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது.இம்மாதம், 2ம் தேதி வரை, நாடு முழுதும், 16.54 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, 78 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. அடுத்த மூன்று நாட்களுக்குள், மாநிலங்களுக்கு, 56 லட்சம் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நிறுவனங்கள் உறுதிமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து, 'ஆர்டர்' வந்துள்ளதை, சீரம் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.'அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்' என, அந்த நிறுவனம், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
04-மே-202119:03:14 IST Report Abuse
Jit Onet Then why was it reported that there weren't orders ? Somebody is mischievously starting rumors. These elements must be exposed and punished
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
04-மே-202112:21:31 IST Report Abuse
Murthy உண்மையை கூறிய நிறுவன மேலாளர்...மறைக்கும் அரசு...130 கோடி மக்களுக்கு 10+12 கோடி ஆர்டர் போதுமா? என்னவகையான நிர்வாகம்?
Rate this:
Cancel
saravan - bangaloru,சவுதி அரேபியா
04-மே-202109:52:22 IST Report Abuse
saravan இதுபோன்ற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X