அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவானதை விட 158 ஓட்டுகள் கூடுதல்

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேலம்:ஏற்காடு சட்டசபை தேர்தல் முடிவுகளில், பதிவான ஓட்டுகளை விடவும், 158 ஓட்டுகள் கூடுதலாக வேட்பாளர்கள் வாங்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த குளறுபடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டசபை தொகுதியில், 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 916 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த, 6ல் நடந்த ஓட்டுப்பதிவின் போது, 2 லட்சத்து, 35 ஆயிரத்து, 899 பேர் என, 83.09 சதவீதம் பேர்

சேலம்:ஏற்காடு சட்டசபை தேர்தல் முடிவுகளில், பதிவான ஓட்டுகளை விடவும், 158 ஓட்டுகள் கூடுதலாக வேட்பாளர்கள் வாங்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த குளறுபடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டசபை தொகுதியில், 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 916 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த, 6ல் நடந்த ஓட்டுப்பதிவின் போது, 2 லட்சத்து, 35 ஆயிரத்து, 899 பேர் என, 83.09 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். இத்தகவல், தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் வெளியிட பட்டு உள்ளது.நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கை விபரங்கள், இரவு வெளியிடப்பட்டது.

இதன் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் சித்ரா, 1 லட்சத்து, 20 ஆயிரத்து, 542, தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வன், 93 ஆயிரத்து 927, மற்ற வேட்பாளர்கள் மற்றும் நோட்டா சேர்த்து, 2 லட்சத்து, 36 ஆயிரத்து 57 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதாவது, ஓட்டுப்பதிவை விட, 158 ஓட்டுகள் கூடுதலாக கணக்கிடப்பட்டுள்ளது. தி.மு.க., வேட்பாளர் மற்றும் முகவர்கள், ஓட்டு வித்தியாசம் அதிகரிக்க தொடங்கியதும் கிளம்பி விட்டனர். மீதமிருந்தவர்களும், இதை கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.

இந்த ஓட்டுகள் அடிப்படையில், அ.தி.மு.க., வேட்பாளர் சித்ராவுக்கு, வெற்றி சான்றிதழ் வழங்க பட்டது. இந்த விபரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும், பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நாளன்று பதிவான ஓட்டுகளை விடவும், அதிக ஓட்டுகள் கணக்கிடப் பட்டுள்ள குளறுபடியை, தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், தேர்தல் பார்வையாளர் பங்கஜ்குமார் உள்ளிட்டோர் கூட சரிபார்க்காதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:08:00 IST Report Abuse
Jayvee அந்த அதிக வாக்குகள் வோட்டு பெட்டிகளை சரிப்பார்க ஏஜெண்டுகள் போட்ட வாக்குகளாக இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X