பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும்,'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி,
கொரோனா, தடுப்பு, அதிகாரிகள், ஸ்டாலின், உத்தரவு

சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும்,'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன், ஸ்டாலின் நேற்று தன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



பின், அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்த உத்தரவுகள்:

* கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

* தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202115:00:35 IST Report Abuse
theruvasagan பதவிப் பிரமாணம் எடுத்துக்கறதுக்கு முன்னாடியே உத்தரவெல்லாம் போடுவாங்களா.
Rate this:
Cancel
04-மே-202111:18:35 IST Report Abuse
அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி கரோனா டெஸ்ட் பண்ணீங்களாய்யா..... இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டானே....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202107:50:39 IST Report Abuse
g.s,rajan சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை எவ்வளவு வேணும்னா செய்யுங்க ஆனா இந்த லாக் டவுன் மட்டும் வேண்டாம் ,வெற்றிக்கொண்டாட்டமும் விடவே வேண்டாம் .என்ன பெரிய லாக் டவுன் வேண்டிக் கிடக்கு அவனவன் வருமானம் இல்லாம சாவறான் சரியா தொழில் நடத்தமுடியல ,வேலையே இல்லை இருக்கிற வேலைக்கும் ஒழுங்காய் போக முடியல அப்படியே போனா கூட சரியான சம்பளம் வாங்க முடியல கொரோனா என்ற வியாதியின் பேரைச் சொல்லி மக்களை வடி கட்டிய முட்டாள் ஆக்கி திசை திருப்பி ஒரு பக்கம் பீதியையும் உயிர் போயிடும் அப்படின்னு மக்களை மன உளைச்சலுக்கு மத்திய மாநில அரசுகள் ஆளாக்குறாங்க ,மறுபக்கம் வியாதி பரவுரத்தைத் தடுக்கிறோம்னு லாக் டவுண்போட்டு பொது மக்களை வாட்டி வதைக்காதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X