அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நோட்டா'வால் தோற்ற வேட்பாளர்கள்

Added : மே 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சட்டசபை தேர்தலில், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் அதிகளவிலும், விராலிமலை தொகுதியில் மிகக் குறைந்த அளவிலும், 'நோட்டா' பதிவாகியுள்ளது.ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென்று நினைத்தாலும், தகுதியான வேட்பாளர் யாரும் இல்லை என்று நினைக்கும் வாக்காளர்கள், 'யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என பதிவிடுவதற்காக, 'நோட்டா' என்ற ஒரு வாய்ப்பை, தேர்தல் கமிஷன்
 'நோட்டா'வால் தோற்ற   வேட்பாளர்கள்

சட்டசபை தேர்தலில், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் அதிகளவிலும், விராலிமலை தொகுதியில் மிகக் குறைந்த அளவிலும், 'நோட்டா' பதிவாகியுள்ளது.ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென்று நினைத்தாலும், தகுதியான வேட்பாளர் யாரும் இல்லை என்று நினைக்கும் வாக்காளர்கள், 'யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என பதிவிடுவதற்காக, 'நோட்டா' என்ற ஒரு வாய்ப்பை, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

தமிழகத்திலேயே, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் தான், நோட்டாவுக்கு அதிகபட்சமாக, 2,342 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது, பதிவான ஓட்டுகளில், 1.29 சதவீதம்.இந்த தொகுதியில், தி.மு.க.,வின் வி.ஐ.பி., வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன், பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதியிடம், 281 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகளில், 13 சதவீத ஓட்டுகள், சுப்புலட்சுமிக்கு விழுந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். அவர் வென்றிருந்தால், அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும், இந்தளவிற்கு நோட்டாவுக்கு ஓட்டுகள் விழவில்லை என்றாலும், 20 தொகுதிகளில், 1 சதவீதத்துக்கும் அதிகமாக, நோட்டாவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் வெற்றி பெற்றுள்ள விராலிமலை தொகுதியில் தான், தமிழகத்திலேயே மிகக் குறைவான அளவாக, 0.2 சதவீதம் மட்டுமே நோட்டாவுக்கு ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-மே-202110:05:39 IST Report Abuse
Sampath Kumar பிஜேபிகு எதிரி நோட்டா அது பிஜேபிக்கு ஆதரவானது விந்தை தான் ஆனாலும் பிரயோசனம் இல்லை
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-மே-202115:41:14 IST Report Abuse
கல்யாணராமன் சு. எத்தனை பேர் இன்றைய டீ கடை பெஞ்சை படிசீங்கன்னு தெரியலை ....... படிக்காதவர்களுக்காக இதோ: "''ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், 281 ஓட்டுகள்ல, பா.ஜ., வேட்பாளர் டாக்டர் சரஸ்வதியிடம் தோத்து போனாங்கல்லியோ... ''சுப்புலட்சுமி ஜெயிச்சுருந்தா, கண்டிப்பா அமைச்சராகியிருப்பாங்க... தி.மு.க., ஆட்சி உறுதியாகி, கடைசி சுற்றுல, கம்மி ஓட்டுகள்ல பின்தங்கியிருந்த சூழல்ல, தலைமையிடம் சுப்புலட்சுமி பேசியிருக்காங்க ஓய்... ''நீங்க சொன்னா, அதிகாரிகள் நான் ஜெயிச்சதா அறிவிப்பா... பேசி பாருங்களேன்னு கேட்டிருக்காங்க... அதுக்கு, தலைமை எந்த பதிலும் தரலை ஓய்... ''ஆனா, 'இது சம்பந்தமா யார்கிட்டயும் பேச வேண்டாம்... இது, தப்பான முன்னுதாரணமாகிடும்... அப்படி எல்லாம் நாம ஜெயிக்க வேண்டாம்'னு, சீனியர் தலைவர்களிடம் தலைமை சொல்லிடுத்தாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.........
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
09-மே-202113:15:57 IST Report Abuse
Naresh Giridharஉங்களை கூப்பிட்டு சொன்னாங்களாகும். நாங்க டீக்கடை பெஞ்சு பாக்கவில்லை . காபி கடை காய்கறி பெஞ்சு பாத்தோம்....
Rate this:
Cancel
kudiyanavan - coimbatore ,இந்தியா
06-மே-202109:22:01 IST Report Abuse
kudiyanavan சனாதன சக்திகள் சதி .
Rate this:
dina - chennai,இந்தியா
09-மே-202123:13:45 IST Report Abuse
dinaசனாதன சக்திகள் சதி . திராவிட கட்சிகள் பலி ஹா ஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X