அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சிக்கு கீழே சென்ற 'தோப்பு'

Added : மே 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஈரோடு:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக களம் இறங்கி, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட, குறைவான ஓட்டுகளை பெற்றார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில், 2011, 2016ல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் 2013 - 2016 வரை, அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம்.கடந்த, 2016 தேர்தலில் இவர் வென்றபோதும், இவரிடம் இருந்து அமைச்சர் மற்றும்
 நாம் தமிழர் கட்சிக்கு கீழே சென்ற 'தோப்பு'

ஈரோடு:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக களம் இறங்கி, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட, குறைவான ஓட்டுகளை பெற்றார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில், 2011, 2016ல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் 2013 - 2016 வரை, அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம்.கடந்த, 2016 தேர்தலில் இவர் வென்றபோதும், இவரிடம் இருந்து அமைச்சர் மற்றும் புறநகர் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன. 2016 இறுதியில் ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது, இவரது ஆதங்கம்.

இதனால், அமைச்சர்களுக்கு எதிராக பேட்டி கொடுத்தல், முதல்வரை புறக்கணித்தல் என, வீம்பு காட்டினார். எனவே, சட்டசபை தேர்தலில் இவருக்கு, 'சீட்' வழங்காமல், ஜெயகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. தி.மு.க.,வில் கே.கே.சி.பாலு என்பவர் போட்டியிட்டார். விரக்தி அடைந்த, தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக போட்டியிட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தல் முடிவில், அ.தி.மு.க., ஜெயகுமார் - 85,125, தி.மு.க., கே.கே.சி.பாலு - 70,618, தோப்பு வெங்கடாசலம் - 9,891 ஓட்டுகள் பெற்றனர்.

இத்தொகுதியில், 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலத்தைவிட, அதிகமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லோகநாதன், 10,294 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
07-மே-202117:39:58 IST Report Abuse
Anbuselvan பேராசை பெரு நஷ்டம். வாய மூடி கொண்டு அடக்கி வாசிக்கணும் சில சமயங்களில் இந்த அரசியலில் இருக்கணும்னா
Rate this:
Cancel
Dineshbabu Selvaraj - Indore,இந்தியா
07-மே-202115:18:17 IST Report Abuse
Dineshbabu Selvaraj வீம்புக்கு நின்று தோற்றுவித்தார்
Rate this:
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
07-மே-202111:46:02 IST Report Abuse
வால்டர் தோப்புக்கு வச்சிட்டாய்ங்கய்யா ஆப்பு. இரண்டு முறை ஜெயிச்ச ஒடனே தனது செல்வாக்குன்னு நெனெச்சுப்புட்டாரு போல. நின்னு அசிங்கப்பட்டதுக்கு நிக்காமலே இருந்திருக்கலாம். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவா இருக்கும். அமைச்சுவா சுத்திட்டு வீட்டுக்குள்ள சும்மா உக்கார முடியாது இல்ல. சாப்பாடு கூட போடா மாட்டாய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X