முழு முடக்கம் அமல்படுத்த :உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து
முழு முடக்கம், உச்ச நீதிமன்றம் ,பரிந்துரை

புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.

ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து விசாரித்தது.இந்த வழக்கில், நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: கொரோனா வைரஸ், மேலும் பரவுவதை தடுக்க எடுத்துள்ள மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்.
தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள, மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம். தேவைப்பட்டால், முழு முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தலாம்.அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் பொருளாதார சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். முழு முடக்கத்தை அறிவிப்பதற்கு முன், அவர்களுக்கு தேவையான வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மே-202117:07:48 IST Report Abuse
Malick Raja நீதிபதிகள் உள்ளே இருந்து தகவல்கள் அடிப்படையில் ..வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு சொல்ல இது வழக்கு அல்ல .. மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை உணர்ந்து செயல்படுவது அறிவார்ந்த மாண்பு .. ஊரடங்கு என்பது ஏழை எளிய நடுத்தர பணக்காரர்கள் உட்பட 90 % சதவீதத்தினர் பாதிப்புக்குள்ளாக்குவர் .. மக்களுக்கு அறிவார்ந்த வகையில் நிலையை உணர்த்தி அதன்படி செயல்படச்செய்வதே நல்லது .. மாறாக இப்படி ஊரடங்கு என்று சொல்லி மக்களை கூடுதலாக கடைகளுக்கு வரவழைப்பது போன்ற நிலைகளால் மேலும் தொற்றுப்பரவலாம் .. ஆக நிலை உணர்ந்து செயல்பட உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
04-மே-202112:22:03 IST Report Abuse
a natanasabapathy இப்போது தான் இழந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது முழு ஊரடங்கு போட்டால் உங்களுக்கு எல்லாம் சம்பளம் சலுகைகள் கொடுக்க பணம் இருக்காது ஒரு வருடத்துக்கு சம்பளம் சலுகைகள் வாங்காமல் வேல செய்ய நீங்க தயாரா நன்கு யோசித்து விஷயம் தெரிந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுங்கள்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-மே-202111:18:10 IST Report Abuse
நக்கீரன் முழு முடக்கத்தை அமல் படுத்திவிடலாம். ஆனால், நீதிபதிகள் யாருக்கும் சம்பளம் கிடையாது. அவற்றை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துவிடலாம். சரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X