அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேடி வந்து 'ஆப்பு' வாங்கிய தினகரன்

Added : மே 03, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:ஜாதி அரசியல் எடுபடாததால், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தோல்வி அடைந்துள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தொகுதியில், நாயக்கர் சமூகத்தினரே வெற்றி பெற்று வருகின்றனர். இங்கு, 2016ல் வெற்றி பெற்று அமைச்சரான கடம்பூர் ராஜு, அ.தி.மு.க., சார்பிலும், தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ.,வை சேர்ந்த சீனிவாசனும் வேட்பாளராகினர். இருவரும், நாயக்கர் சமூகத்தைச்

திருநெல்வேலி:ஜாதி அரசியல் எடுபடாததால், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தோல்வி அடைந்துள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தொகுதியில், நாயக்கர் சமூகத்தினரே வெற்றி பெற்று வருகின்றனர்.

இங்கு, 2016ல் வெற்றி பெற்று அமைச்சரான கடம்பூர் ராஜு, அ.தி.மு.க., சார்பிலும், தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ.,வை சேர்ந்த சீனிவாசனும் வேட்பாளராகினர். இருவரும், நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால், இத்தொகுதி அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின், இங்கு தேவர் ஓட்டுகள் கணிசமாக அதிகரித்தது. இதற்கு, 2016ல் நடந்த தேர்தலில், தேவர் சமூகத்தை சேர்ந்த தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் வெறும், 428 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், கடம்பூர் ராஜுவிடம் தோல்வி அடைந்ததை கூறலாம்.அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், நாயக்கர் ஓட்டுகளை பிரிக்கும்போது, தேவர் ஓட்டுகளை பெற்று எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்து, தினகரன் களம் இறங்கினார்.

அதோடு, கட்சியின் தென் மண்டல செயலர் மாணிக்கராஜாவையும் அதிகமாக நம்பி இருந்தார். ஆனால், கடம்பூர் ராஜுவிடம், 12 ஆயிரத்து, 403 ஓட்டுகள் வித்தியாசத்தில் தினகரன் தோல்வி அடைந்தார். தினகரனுக்கு, ஜாதி அரசியல் கைகொடுக்கவில்லை.துாத்துக்குடி மாவட்டத்தில், ஆறு தொகுதிகளில் ஐந்தில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. கோவில்பட்டி மட்டும் ஒரு கட்சியின் தலைவரையே தோற்கடித்து, அ.தி.மு.க.,விற்கு வெற்றியை கொடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X