அரசியல் செய்தி

தமிழ்நாடு

2வது முறையாக ஆண்டிபட்டியில் 2வது முறையாக தம்பியை தோற்கடித்த அண்ணன்

Added : மே 03, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட அண்ணன், தம்பிகளில் இரண்டாவது முறையாக, தம்பியை அண்ணன் தோற்கடித்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில், 2019-ல் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் மகாராஜன், 65, அ.தி.மு.க., சார்பில், அவரது தம்பி லோகிராஜன், 63, ஆகியோர் போட்டியிட்டனர். மகாராஜன், தம்பியைவிட, 12 ஆயிரத்து, 323 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார். தற்போது, 2021 சட்டசபை

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட அண்ணன், தம்பிகளில் இரண்டாவது முறையாக, தம்பியை அண்ணன் தோற்கடித்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில், 2019-ல் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் மகாராஜன், 65, அ.தி.மு.க., சார்பில், அவரது தம்பி லோகிராஜன், 63, ஆகியோர் போட்டியிட்டனர். மகாராஜன், தம்பியைவிட, 12 ஆயிரத்து, 323 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார். தற்போது, 2021 சட்டசபை தேர்தலிலும், இவர்களே மீண்டும் போட்டியிட்டனர்.

இதில், தி.மு.க., வேட்பாளர் மகாராஜன், 93 ஆயிரத்து, 541 ஓட்டுகளும், அவரது தம்பி அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன், 85 ஆயிரத்து, மூன்று ஓட்டுகளும் பெற்றனர்.மகாராஜன், லோகிராஜனை விட, 8,538 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X