அரசியல் செய்தி

தமிழ்நாடு

746 ஓட்டுகள் வித்தியாசத்தில் துரைமுருகன் போராடி வெற்றி

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்:தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், 746 ஓட்டுகள் வித்தியாசத்தில், போராடி வெற்றி பெற்றார்.தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், 10வது முறையாக போட்டியிட்டார். அ.தி.மு.க., வேட்பாளராக ராமு போட்டியிட்டார்.ஓட்டு எண்ணிக்கையில், எட்டு சுற்றுகள் வரை, 6,500 ஓட்டுகள் வித்தியாசத்தில், ராமு முன்னணியில் இருந்தார்.ஒன்பது முதல், 20 சுற்றுகள் வரை, 500, 800

வேலுார்:தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், 746 ஓட்டுகள் வித்தியாசத்தில், போராடி வெற்றி பெற்றார்.தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், 10வது முறையாக போட்டியிட்டார்.

அ.தி.மு.க., வேட்பாளராக ராமு போட்டியிட்டார்.ஓட்டு எண்ணிக்கையில், எட்டு சுற்றுகள் வரை, 6,500 ஓட்டுகள் வித்தியாசத்தில், ராமு முன்னணியில் இருந்தார்.ஒன்பது முதல், 20 சுற்றுகள் வரை, 500, 800 என்ற எண்ணிக்கையில், துரைமுருகன் முன்னேறினார். 21 முதல் 25 வரை, மீண்டும் ராமு முன்னிலைக்கு சென்றார். 346 ஓட்டுகள் வித்தியாசம் மட்டுமே இருந்தது.மற்ற இடங்களில், தி.மு.க., முன்னிலை பெற்றிருந்த நேரத்தில், காட்பாடியில் பின்னடைவை சந்தித்தது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது, ஓட்டு எண்ணிக்கையின்போது பழுது ஏற்பட்டதால், ஐந்து கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் மாதிரி ஓட்டுப்பதிவில் அழிக்காமல் இருந்த, கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றின் ஓட்டு எண்ணிக்கையை நடத்தும்படி, அ.தி.மு.க.,வினர் கூறினர். முதலில் தபால் ஓட்டுகளை எண்ணி விட்டு, பிறகு பழுதடைந்ததை சரி செய்து எண்ணும்படி, தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், தபால் ஓட்டுகளை எண்ணிய பிறகே, ஐந்து யூனிட்டுகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், 746 ஓட்டுகள் முன்னிலையில் துரைமுருகன் இருந்தார். மாதிரி ஓட்டுப்பதிவு யூனிட்டில் பதிவான ஓட்டுகள், இதைவிட குறைவாக இருந்ததால், அதை எண்ணும் பணியை கை விட்டனர். இதனால், 746 ஓட்டுகள் வித்தியாசத்தில், துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:00:19 IST Report Abuse
Jayvee அது போராடி பெற்ற வெற்றியில்லை .. கெஞ்சி பெற்ற வெற்றி.. ராஜகண்ணப்பன் சிதம்பரத்திற்கு கொடுத்ததைப்போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X