அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்தியில் ஆட்சி மாற்றம்

Added : மே 03, 2021
Share
Advertisement
காரைக்குடி:''எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டால், மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி:ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு

காரைக்குடி:''எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டால், மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி:ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு பாராட்டுகள்.தேர்தல் கமிஷனை சீரமைக்க வேண்டும். தலைமை தேர்தல் கமிஷனராக சிறந்த அதிகாரிகள் வர வேண்டும். காங்., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பா.ஜ.,வை வெற்றியடைய செய்த நான்கு தொகுதி மக்களும், விரைவில் வருந்துவர். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் எதிர்காலம் குறித்து, கவலையடைகிறேன். அவர்களை அடையாளம் கண்டு, எங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வேன்.கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்து, 11 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கட்சிகள், தொடர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X