அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை சந்தித்து வைகோ, திருமாவளவன் வாழ்த்து * அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாகம்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள், அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக அறிவாலயம் வந்த ஸ்டாலினுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது
 ஸ்டாலினை சந்தித்து வைகோ, திருமாவளவன் வாழ்த்து * அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாகம்

சென்னை:தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள், அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக அறிவாலயம் வந்த ஸ்டாலினுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. வரும், 7ம் தேதி, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்ற பின், முதன் முறையாக, அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வந்தார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கி, பொன்னாடைகள் அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.வெற்றி பெற்ற தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றனர்; சிலர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கினர்.

ஸ்டாலினை சந்தித்த தலைவர்கள் அளித்த பேட்டி:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: திராவிட இயக்க வரலாற்றில், பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய மகத்தான வெற்றியை ஸ்டாலின் தேடித் தந்துள்ளார். மொத்த இந்தியாவின் பார்வையும், தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. மதச்சார்பின்மையும், சமூக நீதியும் காப்பாற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: கடந்த, 10 ஆண்டுகளுக்கு பின், தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இனி, வளமான தமிழகம் உருவாகும் வகையில், ஸ்டாலின் தலைமையில், பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நல்லாட்சி அமையும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்: ஜனநாயகத்தை சிறிதும் மதிக்காத அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியை, மகத்தான வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றி தருவதாக, உறுதி அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினின் தேர்தல் வியூகம், மகத்தான வெற்றியை தந்துள்ளது. லோக்சபா தேர்தலில் அமைந்த கூட்டணியை, சிந்தாமல், சிதறவிடாமல் கட்டுக்கோப்பாக வழி நடத்தி, சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை ஸ்டாலின் தேடி தந்துள்ளார். தமிழகத்தில் ஆறாவது முறையாக, தி.மு.க., ஆட்சி அமைத்து, நல்லாட்சி தரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருணாநிதி படத்தின் முன்ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்

கோபாலபுரம் வீட்டிற்கு, ஸ்டாலின் நேற்று காலை சென்றார். அங்கு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது, ஸ்டாலினுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. அதை தன் கைக்குட்டையால் துடைத்தார். பின், தன் தாயார் தயாளுவை சந்தித்து, தி.மு.க., பெற்ற வெற்றியை எடுத்துக்கூறி, ஆசி பெற்றார்.


குவியும் தலைவர்கள் வாழ்த்து

முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும், நேரிலும், தொலைபேசியிலும், வாழ்த்து கடிதம் வாயிலாகவும், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலர் டி.ராஜா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், இலங்கை எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பஞ்சாப் விவசாயிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வாழ்த்து செய்திக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X