சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிப்பு குறைவா; 'அட்மிட்' வேண்டாம்! உள்ளாட்சிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:''கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்களை, மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள

சென்னை:''கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்களை, மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில், அவர்களுக்கு எங்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவசியம்.

தற்போதைய சூழலில்,கொரோனா நோயாளிகளில், 80 சதவீதம் பேர், வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொள்வது போதுமானது; 20 சதவீதம் பேருக்கு தான், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களிலும், 5 சதவீதம் பேருக்கு மட்டுமே, தீவிர சிகிச்சை அவசியமாகிறது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, 94 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பவர்களை, குறைந்த பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும். அதேபோல, 90 முதல், 94 சதவீதம் வரை உள்ளவர்கள் மிதமான பாதிப்பு உடையவர்கள்; 90க்கு கீழ் உள்ளவர்களை தான், தீவிர பாதிப்பு உடையவர் களாக கருத வேண்டும்.மேலும், நாடித்துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் பரிசோதித்து, நோயாளிகளின் உடல் நிலையை மதிப்பிடுதல் அவசியம்.

இணை நோய்களால் பாதிக்கப்பட்டோரது உடல்நிலையை பரிசோதித்தல் கட்டாயம்.குறைந்த பாதிப்புடன் உள்ள கொரோனா நோயாளிகள், வேறு எந்த இணை நோய்க்கும் உள்ளாகாமல் இருந்தால், அவர்களை பரிசோதித்து, வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தலாம். அவர்களுக்கு, வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால், கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு செல்ல பரிந்துரைக்க வேண்டும்.

மிதமான மற்றும் தீவிரமான பாதிப்புடையவர்களுக்கு, இணை நோய்களும் இருந்தால், கட்டாயம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். அதே வேளையில், குறைந்த பாதிப்பு மற்றும் அறிகுறிகளே இல்லாத நோயாளிகளை, மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டாம்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X