பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் ஆலோசகர் சண்முகம் ராஜினாமா

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் ஆலோசகராக இருந்த, முன்னாள் தலைமை செயலர் சண்முகம், தன் பதவியை ராஜினாமா செய்தார்.தமிழக அரசின் தலைமை செயலர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சண்முகம், ஜனவரி 31ல், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சியாக இருந்த, தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

சென்னை:தமிழக அரசின் ஆலோசகராக இருந்த, முன்னாள் தலைமை செயலர் சண்முகம், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக அரசின் தலைமை செயலர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சண்முகம், ஜனவரி 31ல், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சியாக இருந்த, தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வதாக, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சனுக்கு, நேற்று சண்முகம் கடிதம் அனுப்பினார். தனிப்பட்ட காரணங்களுக்காக, ஆலோசகர்பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஆலோசகர் பதவியில் இருந்தபோது, தனக்கு ஒத்துழைப்பு அளித்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கடிதத்தில் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X