பொது செய்தி

இந்தியா

விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கில் சி.பி.ஐ., நடவடிக்கை

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில், தவறு செய்த போலீஸ் உயரதிகாரிகள் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதுஇஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, இஸ்ரோ விஞ்ஞானி, நம்பி நாராயணன் உள்ளிட்டோர்
விஞ்ஞானி நம்பி நாராயணன்  வழக்கு, சி.பி.ஐ., நடவடிக்கை

புதுடில்லி: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில், தவறு செய்த போலீஸ் உயரதிகாரிகள் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது

இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, இஸ்ரோ விஞ்ஞானி, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. 'நம்பி நாராயணன் குற்றமற்றவர்' என, நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil newsதவறு செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்யவும், குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து, அந்த அறிக்கையில் குறிப்பிட்ட, போலீஸ் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
அதன்படி, கேரள போலீஸ் உயரதிகாரிகள் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதனால், ஓய்வு பெற்று விட்ட அந்த போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
04-மே-202120:19:17 IST Report Abuse
W W இது ஒரு இன்டெர்னல் பாலிடிக்ஸ் கருணாகரன் CM யை இறக்க நடந்த சாதி அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் இதில் அவர் பங்கு ஒன்றுமில்லை ,.இதில் பாதிக்கப்பட்டது விஞ்ஞானி நம்பி நாராயணன் மட்டுமே இதனால் இந்தியாவிற்கே பொறுத்த நாஷ்டம் பாவம் ஒருபக்கம் (கருணாகரன் CM ன் எதிரிகள் )பழி ஒரு பக்கம் .அவருக்கு 1000 கோடி நழ்ட ஈடு கொடுத்தாலும் பத்தாது அவரின் லப்யை பதித்து விட்டார்கள் . இதனை ஆராய்ந்து உயிருடன் இருக்கும் ( so for they are in Political Shield , now it is changed ,thats why it has come out ) தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
04-மே-202119:09:54 IST Report Abuse
Venkat Sadagopan வாய்மையே வெல்லும் !
Rate this:
Cancel
04-மே-202119:09:50 IST Report Abuse
Venkat Sadagopan வாய்மையே வெல்லும் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X