பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்சி மாற்றம் எதிரொலி அரசு வக்கீல்கள் விலகல்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர், ராஜினாமா கடிதங்களை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயண், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் ஆகியோர் உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு பிளீடர்கள், கூடுதல் பிளீடர்கள், அரசு

சென்னை:ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர், ராஜினாமா கடிதங்களை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயண், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் ஆகியோர் உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு பிளீடர்கள், கூடுதல் பிளீடர்கள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் உள்ளனர். அரசு சார்பில், இவர்கள் ஆஜராகின்றனர்.

தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ராஜினாமா கடிதத்தை, தேர்தல் முடிவு வரும் முன், மே 1ல், முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.அட்வகேட் ஜெனரலாக பதவி காலத்தை பூர்த்தி செய்வதால், தனிப்பட்ட வழக்குகளில் ஆஜராவதற்கான நேரம் வந்துள்ளது; இந்த தனிப்பட்ட காரணத்துக்காக, அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக, கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

தலைமை குற்றவியல்வழக்கறிஞர் ஏ.நடராஜன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும், ராஜினாமா கடிதங்களை அனுப்பி உள்ளனர். தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டு, சிறப்பு பிளீடர்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், சிறப்பு பிளீடர் திருமாறன், கூடுதல் பிளீடர்கள் ஆர்.வி.பாபு, எம்.பெருமாள், புருஷோத்தமன் ஆகியோர், ஆட்சி மாற்றத்தால் ராஜினாமா செய்வதாக கூறி, கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றும் செல்லப்பாண்டியன், ஸ்ரீசரண் ரங்கராஜன் ஆகியோரும், ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர். அட்வகேட் ஜெனரல்?தி.மு.க., அரசு அமைவதை தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல் பதவிக்கு, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி.,யுமான சண்முகசுந்தரத்தை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர், ஏற்கனவே தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தவர்.புதிய அட்வகேட் ஜெனரல் நியமனத்தை தொடர்ந்து, மற்ற பதவிகளில் விரைந்து நியமனங்கள் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X