பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு கொரோனா பணி கிடைக்குமா?

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும், மருத்துவர்களுக்கு உதவி செய்யும் நர்ஸ்களாகவும் பணிபுரிய, நாடெங்கும் உள்ள பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது போன்ற பணியில் ஈடுபட, வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, பயிற்சிக்கு விண்ணப்பித்து காத்திருப்போரையும் பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை:கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும், மருத்துவர்களுக்கு உதவி செய்யும் நர்ஸ்களாகவும் பணிபுரிய, நாடெங்கும் உள்ள பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற பணியில் ஈடுபட, வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, பயிற்சிக்கு விண்ணப்பித்து காத்திருப்போரையும் பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின், இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு டாக்டரும்,தினமும், 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும், மருத்துவமனை வாசல்களில், 20ல் இருந்து, 30 ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, ஏராளமானோர் முன்வர வேண்டும் என, சுகாதாரத் துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

தற்போது ஆட்சி கைமாறுவதால், முதல்வராக பதவியேற்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வெளிநாட்டில் படித்து, தற்போது இங்கு பயிற்சி பெறக் காத்திருக்கும் மாணவர்களையும், கொரோனா பணிக்கு பயன்படுத்த வேண்டும் என, சென்னையில் பயிற்சி அளித்து வரும், 'லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன்' நிறுவன இயக்குனர் முகமது கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:நாடு முழுதும், டாக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து விட்டு, இந்தியா வந்தவர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும், எப்.எம்.ஜி.இ., என்ற தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மேலும், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும். இதற்காக விண்ணப்பித்து, 17 ஆயிரம் டாக்டர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும், 1,000த்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் உள்ளனர்.கர்நாடக மாநிலத்தில், வெளிநாடுகளில் படித்தவர்கள், இங்கு நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தேர்வே எழுதா விட்டாலும், அவர்களை உடனடியாக கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு, அம்மாநில அரசு பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பயிற்சி கட்டணம் கட்டி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ளதாலும், டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாலும், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, பயிற்சி டாக்டராக பணியாற்ற விண்ணப்பித்து, காத்திருக்கும் டாக்டர்களை, கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும். இதனால், எதிர்வரும் சவாலான காலத்தை, தமிழக அரசால் சமாளிக்க முடியும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X