அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வராக ஸ்டாலின் 7ம் தேதி பதவியேற்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (46+ 52)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் 7ம் தேதி பதவியேற்கிறார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவோர் பற்றிய எதிர்பார்ப்பு, அக்கட்சி வட்டாரத்தில் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.இதற்கிடையில், ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை,
முதல்வர், ஸ்டாலின் ,7ம் தேதி ,பதவியேற்பு

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் 7ம் தேதி பதவியேற்கிறார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவோர் பற்றிய எதிர்பார்ப்பு, அக்கட்சி வட்டாரத்தில் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் பட்டியல் தயாரிப்பு
பணி தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது. அதில், சட்டசபை தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கவர்னர் மாளிகையில், எளிமையாக, முதல்வர் பதவி ஏற்க உள்ளார் ஸ்டாலின்.


இந்நிலையில், இன்று மாலை, 6:00 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ..,க்கள் கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 6:00 மணிக்கு, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
இக்கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக, ஒருமனதாக ஸ்டாலினை
தேர்வு செய்வதற்கான தீர்மானத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கையெழுத்திடுவர்.
அதன் அடிப்படையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி, கவர்னருக்கு கோரிக்கை விடுத்து, தி.மு.க., சார்பில் கடிதம் தயாராகும். பின், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், கவர்னர் மாளிகை சென்று, கவர்னரை சந்தித்து, அக்கடிதத்தையும், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும் அளிப்பர்.
அந்த கடிதத்தில், பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் அமைச்சர்கள் விபரமும் அடங்கியிருக்கும். அக்கடிதத்தை ஏற்று, ஸ்டாலினை பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுவார்.
அழைப்பு விடுத்ததும், பதவியேற்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வரும், 7 ம் தேதி வெள்ளிக்கிழமை, நல்ல நாள் என்பதால், அன்று பதவியேற்பு விழா நடத்தப்படும் என, தெரிகிறது.பதவியேற்பு நாளில் அல்லது அதற்கு முந்தைய நாள் மாலையில், அமைச்சரவை பட்டியல் வெளியாகலாம். தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர்களில், முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர்; புதுமுகங்களும் நிறைய உள்ளனர். அதனால், இரு தரப்புக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதாக சொல்கிறது, தி.மு.க., வட்டாரம்.


latest tamil news

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும்,'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன், ஸ்டாலின் நேற்று தன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின், அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்த உத்தரவுகள்:
* கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

* தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46+ 52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-மே-202119:55:02 IST Report Abuse
Natarajan Ramanathan அன்று காலை 10.30 மேல் 12 மணிக்குள் பதவி ஏற்கும் தைரியம் உண்டா?
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
04-மே-202119:44:09 IST Report Abuse
MURUGESAN குறள் 542: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி - கலைஞர் விளக்க உரை: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது / குறள் 547: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் - கலைஞர் விளக்க உரை: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் / குறள் 548: எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் - கலைஞர் விளக்க உரை: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
04-மே-202119:33:13 IST Report Abuse
SENTHIL நீங்க தான் பகுத்தரிவு பகலவன் ஆச்சே, நாள் நேரம் பார்க்காம பதவி ஏற்க வேண்டியது தானே. இன்றும் நாளையும் அஷ்டமி நவமி, அதனால் வெள்ளி அன்று பதவி ஏற்ப்பா.... ஏன் அன்று காலை 10:30 முதல் 12 ராகு காலம் அப்ப பதவி ஏற்று பகுத்தரிவு பறை சாற்ற முடியுமா?. இதில் என்ன ஒரு வேடிக்கை எனறால் இரண்டு நாட்களாக இங்கு கருத்து எழுதும் பெரும்பாலோர் இவர்க்கு சம்ப்ரதாயமாக கூட வாழ்த்து சொல்ல வில்லை. இதில் இருந்தே தெரிகிறது இவர் வந்தது பெரும்பாலோர் யாருக்கும் இஷ்டமில்லை. என்ன பண்ணுறது எல்லாம் விதி. 60 மாதம் அனுபவித்து ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X