அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நன்றி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (18+ 70)
Share
Advertisement
சென்னை :அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். 'ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தலில்,
வாக்காளர்கள்,  ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நன்றி

சென்னை :அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

'ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.


கொள்கை வழி



தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த, அ.தி.மு.க., அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் அரும் பணிகளை, மக்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி; மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது.
தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும், எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன், என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும், மனத்துாய்மையுடன்,
கட்சியின் கொள்கை வழி நின்று செவ்வனே நிறைவேற்றுவோம். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட, வேட்பாளர்களின் வெற்றிக்காக, இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


தோளோடு தோள்



எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெ.,வால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அ.தி.மு.க., தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றவும், கட்சியை கட்டிக் காக்கும் கடமையில், தோளோடு தோள் நின்று உழைக்கவும், கட்சியினர் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கட்சியை காப்போம்; கடமைகளைத் தொடர்வோம்.இவ்வாறு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தெரிவித்துஉள்ளனர்.


ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து



முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, இ.பி.எஸ்.,வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின், 'மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்கள் ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை' என, கேட்டுள்ளார்.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு, என்னுடைய நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.

அதேபோல, கேரளா முதல்வராக பொறுப்பேற்க உள்ள பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கும், இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாழ்த்து தெரிவித்த, இ.பி.எஸ்.,சுக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:தங்களுக்கு என்னுடைய நன்றி. மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதேபோல, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சும், முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (18+ 70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202119:04:19 IST Report Abuse
ஆப்பு இரண்டு கழகங்களும் ஒழிக்கப்பட வேண்டியவை என்பதில் பி.ஜே.பி க்கு மாற்றுக்கருத்து இல்லை. ஒண்ணு எதிரியான தி.மு.க வை வீழ்ற்றணும். இல்லே நட்புக்கட்சி அதிமுக வை ஒழிக்கணும். முதல் கட்டமாய் அதிமுக காலியாகும். ஜெயலலிதாவைப் போல மக்களுக்கு கூத்தாடி கவரக்கூடியவர்கள் யாரும் இல்லை. விரைவில் அதிமுக காங்கிரஸ் மாதிரி ஆயிடும். தி.மு.க வை அஞ்சு வருஷம் வெச்சு செய்யலாம்.
Rate this:
Cancel
04-மே-202118:58:35 IST Report Abuse
ஆப்பு தர்மயுத்தத்தில் வென்றது ஓ.பி.எஸ்.
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி மொதல்ல பொதுக்குழு கூடி இந்த ஓ பி எஸ்ஸ (அதான் ஓ பன்னீர் செல்வத்தை) அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அ இ அ தி மு க தலைவராக தேர்ந்தெடுக்க படவேண்டும். பொது செயலாளராக முனுசாமியோ இல்லை வைத்தியலிங்கமோ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விளங்கா மூஞ்சி ஓ பன்னீர் செல்வத்தை முடிந்தால் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என இதய தெய்வம் எடப்பாடி திரு K பழனிசாமிக்கு உத்தரவிடுகிறேன்.
Rate this:
04-மே-202116:38:01 IST Report Abuse
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி மொதல்ல பொதுக்குழு கூடி இந்த ஓ பி எஸ்ஸ (அதான் ஓ பன்னீர் செல்வத்தை) அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அ இ அ தி மு க தலைவராக இதய தெய்வம் திரு எடப்பாடி K பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்க படவேண்டும். பொது செயலாளராக முனுசாமியோ இல்லை வைத்தியலிங்கமோ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஓ பன்னீர் செல்வத்தை முடிந்தால் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என இதய தெய்வம் எடப்பாடி திரு K பழனிசாமிக்கு உத்தரவிடுகிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X