அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றிக்கு கை கொடுத்த கனிமொழி பிரசாரம்

Added : மே 03, 2021
Share
Advertisement
தி.மு.க., வெற்றிக்கு, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழியின், தீவிர பிரசாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.தமிழகத்தில், பத்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் இல்லை. 8,000 கி.மீ., பயணம்எனவே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்புடன், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தி.மு.க., தேர்தல் பணியை துவக்கியது. தி.மு.க., தலைவர்

தி.மு.க., வெற்றிக்கு, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழியின், தீவிர பிரசாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில், பத்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் இல்லை. 8,000 கி.மீ., பயணம்எனவே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்புடன், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தி.மு.க., தேர்தல் பணியை துவக்கியது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலர் உதயநிதி ஆகியோர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க.,வுக்கு பெண்கள் ஓட்டு அதிக அளவில் விழுவது, அக்கட்சிக்கு பலமாக உள்ளதால், பெண்கள் ஓட்டுகளை கவர, மகளிர் அணி மாநில செயலரான, கனிமொழி எம்.பி.,யை பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.அவர், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 2020 டிசம்பர் முதல் வாரத்திலேயே, பிரசாரத்தை துவக்கினார். ஐந்து மாதங்களில், நுாறு நாட்கள் பிரசாரம் செய்தார். மொத்தம், 550 கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

தன் பிரசாரத்தின் போது, 30 மாவட்டங்களில், 117 சட்டசபை தொகுதிகளிலும், 100 பேரூராட்சிகளிலும், வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். மொத்தம், 8,000 கி.மீ., பயணம் செய்தார்.நம்பிக்கைபிரசாரத்தின் போது, மீனவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், நெசவாளர்கள் என, பல தரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக திருப்பினார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில், பெண்களை கவர்ந்துள்ளார். இவரது பிரசாரம், தி.மு.க., வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்து உள்ளது. இம்முறை, பெண்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்ட நிலையில், தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்து உள்ளது. எனவே, கட்சியில் கனிமொழிக்கு, இனிமேல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அமைச்சர் பதவி பெற, சிலர் அவரை சுற்றி வரத் துவங்கி உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X