சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு மருத்துவமனையில் 6 கொரோனா நோயாளிகள் இறப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஒரு மணி நேரத்திற்குள், ஆறு கொரோனா நோயாளிகள், திடீரென இறந்தனர். ஆக்ஸிஜன் குழாயில் அளவு குறைவு மற்றும் மருத்துவமனை அலட்சியத்தால்தான் அவர்கள் இறந்தனர் என, உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சிகிச்சைசெங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம்,

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஒரு மணி நேரத்திற்குள், ஆறு கொரோனா நோயாளிகள், திடீரென இறந்தனர்.

ஆக்ஸிஜன் குழாயில் அளவு குறைவு மற்றும் மருத்துவமனை அலட்சியத்தால்தான் அவர்கள் இறந்தனர் என, உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சிகிச்சை

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த, செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துார், தாம்பரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆறு கொரோனா நோயாளிகள், நேற்று அதிகாலை, 4:50 மணியிலிருந்து, 5:45 மணிக்குள், அடுத்தடுத்து இறந்தனர்.இது, அங்கிருந்த கொரோனா நோயாளிகளிடம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் இறப்புக்கு, ஆக்ஸிஜன் குறைவு காரணம் என, உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த கொரோனாவால் இறந்தவரின் உறவினர் கூறியதாவது:கொரோனா வார்டில், ஆக்ஸிஜன் செல்லும் குழாயில் அளவு குறைந்ததால், 55 வயதான என் அம்மா, மூச்சுத்திணறி இறந்தார். இதேபோல், அடுத்தடுத்த படுக்கைகளில் இருந்த ஐந்து பேர் இறந்தனர்.


ஆக்ஸிஜன்

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் வந்து, ஆக்ஸிஜன் செல்லும் குழாயில், ஆக்ஸிஜன் அளவை சரிசெய்தனர். மருத்துவமனை அலட்சியத்தால்தான், ஆறு பேர் இறந்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, மருத்துவமனை முதல்வர் முத்துகுமரன் கூறியதாவது:இறந்த ஆறு பேர், ஆக்ஸிஜன் அளவு மாறியதால் இறக்கவில்லை. அவர்களுக்கு, வேறு வகையான பாதிப்பு இருந்தது. அதனால் தான் இறந்துள்ளனர்.

மருத்துவமனையில், போதிய ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. 192 கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளி களுக்காக, 480 படுக்கைகள் உள்ளன. எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.


2,500 லிட்டர் ஆக்ஸிஜன்


செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 10 ஆயிரம் கொள்ளளவு லிட்டரில், இரண்டு சிலிண்டர்; 3,000 லிட்டர் கொள்ளளவில், ஒரு சிலிண்டர் உள்ளது. தவிர, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உள்ள, தனியார் நிறுவனங்களில் இருந்து, ஆக்ஸிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு, 2,500 லிட்டர் ஆக்ஸிஜன், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் பிரச்னையால் யாரும் இறக்கவில்லை.ஜான்லுாயிஸ், செங்கல்பட்டு கலெக்டர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X