பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரமும் கவனம் மின் வாரியம் அறிவுறுத்தல்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:'புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, 24 மணி நேரமும் மின் வினியோகத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்' என, பொறியாளர்களுக்கு, தமிழக மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், சிலர் மின் வினியோக சாதனங்களை வேண்டுமென்றே பழுதாக்கி, மக்களிடம், மின் வாரியத்தின் மீது, அவப்பெயர் ஏற்படுத்திய

சென்னை:'புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, 24 மணி நேரமும் மின் வினியோகத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்' என, பொறியாளர்களுக்கு, தமிழக மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், சிலர் மின் வினியோக சாதனங்களை வேண்டுமென்றே பழுதாக்கி, மக்களிடம், மின் வாரியத்தின் மீது, அவப்பெயர் ஏற்படுத்திய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தற்போது, அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதில், மின் வாரியம் கவனமாக உள்ளது. இதற்காக, 'புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, துணை மின் நிலையங்களில் பணிபுரிவோர், 24 மணி நேரமும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மின் வழித்தடங்களில் செல்லும் மின்சாரம் மற்றும் மின் வினியோகத்தை கண்காணிக்க வேண்டும்.'முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் நாளன்று, சென்னை, கிண்டி ராஜ்பவனை சுற்றியுள்ள பகுதிகளில், கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்' என, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X