பொது செய்தி

தமிழ்நாடு

கத்திரி வெயில் இன்று துவக்கம்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம், இன்று துவங்குகிறது. வரும், 29ம் தேதி வரை நீடிக்கும்.கோடை வெயில் கொளுத்துகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. வேலுார் மற்றும் நாமக்கல்லில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அதேநேரம், 10 நாட்களுக்கு மேலாக, வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி

சென்னை:கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம், இன்று துவங்குகிறது. வரும், 29ம் தேதி வரை நீடிக்கும்.கோடை வெயில் கொளுத்துகிறது.

நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. வேலுார் மற்றும் நாமக்கல்லில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அதேநேரம், 10 நாட்களுக்கு மேலாக, வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, குன்னுாரில், 11 செ.மீ., மழை கொட்டியுள்ளது.

தென்காசி, கோத்தகிரி எஸ்டேட், 7; பரலியாறு, 6; பெரியகுளம், நாகை, 5; கடலாடி, சிவகங்கை, 4; கோவிலான்குளம், பெருஞ்சாணி, 3; பவானிசாகர், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்; காற்றின் வெப்ப நிலை அதிகரிப்பால், இயல்புக்கு மாறாக வியர்க்கும் என, கூறப்பட்டுள்ளது.


கத்திரி துவக்கம்

ஆண்டுதோறும் கோடையில் நிலவும், கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, 21 முதல், வைகாசி, 15 வரை, பஞ்சாங்க கணிப்பின்படி, அக்னி நட்சத்திர காலம். இந்த ஆண்டு, இன்று முதல், 29ம் தேதி வரை, அக்னி நட்சத்திர காலம் என, கூறப்பட்டு உள்ளது. மற்ற நாட்களை விட, கத்திரி வெயிலில் வெப்பம் அதிகரிக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில், வெப்ப சலன மழை அதிக அளவில் பெய்யும். கத்திரி வெயில் காலத்துக்கு பின், தென் மேற்கு பருவ மழை துவங்கும்; தென் மாவட்டங்களுக்கு மழையை தரும். வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில், வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X