சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றால் 20,952 பேர் பாதிப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால், நேற்று மட்டும், 20 ஆயிரத்து, 952 பேர் பாதிக்கப்பட்டனர்; 122 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 1.23 லட்சத்தை கடந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 பரிசோதனை ஆய்வகங்களில், 1.41 லட்சம் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 6,150; செங்கல்பட்டில், 1,618; கோவையில், 1,566;

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால், நேற்று மட்டும், 20 ஆயிரத்து, 952 பேர் பாதிக்கப்பட்டனர்; 122 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 1.23 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 பரிசோதனை ஆய்வகங்களில், 1.41 லட்சம் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 6,150; செங்கல்பட்டில், 1,618; கோவையில், 1,566; திருவள்ளூரில், 1,207 என, 20 ஆயிரத்து, 952 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை, 2.30 கோடி மாதிரிகள் பரிசோதனையில், 12 லட்சத்து, 28 ஆயிரத்து, 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிகிச்சை முடித்து நேற்று, 18 ஆயிரத்து, 16 பேர் உட்பட, 10 லட்சத்து, 90 ஆயிரத்து, 338 வீடு திரும்பியுள்ளனர். தற்போது, சென்னையில், 32 ஆயிரத்து, 785; செங்கல்பட்டில், 9,257; கோவையில், 8,188 என, மாநிலம் முழுதும், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 258 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால், நேற்று சென்னையில், 38 பேர் உட்பட, 122 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை, 14 ஆயிரத்து, 468 இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X