அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிங்கிள் சான்ஸ் சென்டிமென்ட்' கதிகலக்கும் கடையநல்லுார் தொகுதி

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:கடையநல்லுார் தொகுதியில், 50 ஆண்டுகளாக தொடரும், 'சிங்கிள் சான்ஸ் சென்டிமென்ட்' இந்த தேர்தலிலும் தொடர்கிறது.தென்காசி மாவட்டம், கடையநல்லுார், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதனால், தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த தொகுதிக்கு, 1971ம் ஆண்டு முதல், ஒரு சென்டிமென்ட் உள்ளது. ஒரு முறை வெற்றி பெறும்

சென்னை:கடையநல்லுார் தொகுதியில், 50 ஆண்டுகளாக தொடரும், 'சிங்கிள் சான்ஸ் சென்டிமென்ட்' இந்த தேர்தலிலும் தொடர்கிறது.

தென்காசி மாவட்டம், கடையநல்லுார், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதனால், தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த தொகுதிக்கு, 1971ம் ஆண்டு முதல், ஒரு சென்டிமென்ட் உள்ளது. ஒரு முறை வெற்றி பெறும் எம்.எல்.ஏ., அல்லது கட்சி, மீண்டும் வெற்றி பெறுவதில்லை.

கடந்த, 50 ஆண்டுகளாக தொடரும் சென்டிமென்ட், இந்த தேர்தலிலும் நிலைத்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில், சிறுபான்மையினரின், 100 சதவீத ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கு அச்சு பிசகாமல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.அதனால், தி.மு.க., வுடன் நீண்ட கால நட்பில் இருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளர் முஹம்மது அபுபக்கர், கடந்த முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதும், மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற, நம்பிக்கையில் போட்டியிட்டார்.

ஆனால், 50 ஆண்டு சென்டிமென்ட், அபுபக்கரை, அ.தி.மு.க.,வேட்பாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிடம் தோல்வி அடைய வைத்துள்ளது. வெற்றி பெற்றுள்ள குட்டியப்பா, கடையநல்லுார் தொகுதியில், 2011ல் வெற்றி பெற்று அமைச்சராக இருந்து மறைந்த, செந்துார் பாண்டியனின் மகன்.முஸ்லிம் லீக் வேட்பாளர் அபுபக்கர், காயல்பட்டினத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த, கடையநல்லுார் தொகுதியிலேயே முகாமிட்டு, இஸ்லாமிய மக்களிடம் செல்வாக்கை உயர்த்தி கொண்டவர். ஆனாலும், 'சிங்கிள் சான்ஸ் சென்டிமென்ட்' இவரைத் தோல்வி அடையச் செய்துள்ளது.


உட்கட்சி குழப்பம்!



கடையநல்லுாரில், முஸ்லிம் லீக் தோற்க, முக்கிய காரணமாக இருந்தவர், அ.ம.மு.க., வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன். தொழிலதிபரான இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அந்த நேரத்தில், ஜெ., மறைந்ததால், கட்சியில் செல்வாக்கு பெற முடியவில்லை.எனவே, தி.மு.க.,வில் இணைந்தார். தொய்வு நிலையில் இருந்த தி.மு.க.,வை, தென்காசி மாவட்டத்தில், தன் செல்வாக்கை பயன்படுத்தி, மக்கள் சேவை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளால் வலுவாக்கினார்.

கடையநல்லுார் தொகுதியை இவருக்கு வழங்குவதாக, தி.மு.க., தரப்பிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.ஆனால், உட்கட்சி பிரச்னையால், அய்யாத்துரை பாண்டியனை, தலைமை திடீரென ஓரங்கட்டியது. கடையநல்லுார் தொகுதியை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கியது. தி.மு.க., தலைமையின் திடீர் பல்டியை எதிர்பார்க்காத அய்யாத்துரை பாண்டியனுக்கு, அ.ம.மு.க.,வின் தினகரன், 'சீட்' கொடுத்தார். அதற்கு ஏற்றாற்போல, கடையநல்லுார் தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த, எஸ்.டி.பி.ஐ., கட்சியும், அ.ம.மு.க., கூட்டணியில் சேர்ந்தது. எனவே, சிறுபான்மையின முஸ்லிம் ஓட்டுகள், பாதிக்கு பாதியாக அய்யாத்துரை பாண்டியனுக்கு சென்றது.

இந்த அரசியல் சதுரங்கத்தில் தான், மூன்றாம் இடமே கிடைக்கும்என எதிர்பார்க்கப்பட்ட குட்டியப்பா, முதல் இடத்துக்கு முன்னேறி, எம்.எல்.ஏ., ஆகியுள்ளார்.


'சிங்கிள் சான்ஸ்' எம்.எல்.ஏ.,க்கள்

கடையநல்லுார் தொகுதியில், ஒரு முறை மட்டுமே வென்ற எம்.எல்.ஏ.,க்கள்:
கடந்த, 1971, தி.மு.க.,வின் சுப்பையா முதலியார்;

77ல், அ.தி.மு.க., அப்துல் ரசாக்;

80, முஸ்லிம் லீக் சாகுல் ஹமீது;

84, அ.தி.மு.க., பெருமாள்;

89, தி.மு.க., சம்சுதீன் என்ற கா.மு.கதிரவன்;

91, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்;

96, தி.மு.க., நயினார் முகம்மது;

2001, அ.தி.மு.க., சுப்பையா பாண்டியன்;

2006, பீட்டர் அல்போன்ஸ்;

2011, செந்துார் பாண்டியன்;

2016, முஹம்மது அபுபக்கர்;

2021ல் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X