அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல், சீமான் கட்சிகளுக்கு ஓட்டு தினகரன், விஜயகாந்த் கட்சிகள் 'ஷாக்'

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யமும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கமலின் மக்கள் நீதி மய்யம், 135 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சிகளின் தலைவர்களும்
 கமல், சீமான் கட்சிகளுக்கு ஓட்டு தினகரன், விஜயகாந்த் கட்சிகள் 'ஷாக்'

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யமும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளன.

சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கமலின் மக்கள் நீதி மய்யம், 135 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெறவில்லை. ஆனால், இரு கட்சிகளின் வேட்பாளர்களும், பெரும்பாலான இடங்களில்,10 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

அதிலும், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க., வேட்பாளர்களையும், இந்த இரண்டு கட்சிகளும் பின்னுக்கு தள்ளியுள்ளன.உதாரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 தொகுதிகளிலும், ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. இந்த இரு கட்சி வேட்பாளர்களின் ஓட்டுகளை விட, ஐந்து மடங்கு குறைவான ஓட்டுகளை, ஆயிரம், இரண்டாயிரம் என்ற அளவில் தான், தினகரன் மற்றும் விஜயகாந்த் கட்சியினர் பெற்று உள்ளனர்.

தலைநகரான சென்னை மாவட்டத்திலேயே பெரும்பாலான தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கு மேல் இரண்டு கட்சிகளும் ஓட்டுகளை பெற்றுள்ளன. அதில் நா.த.க., அதிகபட்சமாக, ஆர்.கே.நகரில், 20 ஆயிரத்து, 437 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,357 ஓட்டுகளும் பெற்றுள்ளது. ம.நீ.ம., கட்சி அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில், 23 ஆயிரத்து, 72 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,763 ஓட்டுகளும் பெற்றுள்ளது.

சென்னையில் இரு கட்சிகளும் பெற்ற ஓட்டுகள் நிலவரம்

தொகுதி - நா.த.க., - ம.நீ.ம.,

ஆர்.கே.நகர் - 20,437 - 11,198

பெரம்பூர் - 19,821 - 17,072

கொளத்துார் - 11,320 - 14,234

வில்லிவாக்கம் - 10,914 - 13,364

திரு.வி.க., நகர் - 10,921 - 9,710

எழும்பூர் - 6,276 - 9,990

ராயபுரம் - 7,953 - 8,166

துறைமுகம் - 3,357 - 3,763

சேப்பாக்கம் - 9,193 - 4,096(ஐ.ஜே.கே.,)

ஆயிரம் விளக்கு - 8,984 - 11,791

அண்ணா நகர் - 10,406 - 17,522

விருகம்பாக்கம் - 10,185 - 16,939

சைதாப்பேட்டை - 10,717 - 13,454

தி.நகர் - 8,284 - 14,567

மயிலாப்பூர் - 10,124 - 14,904

வேளச்சேரி - 14,171 - 23,072

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-மே-202116:41:35 IST Report Abuse
Malick Raja இனி மேலும் தேர்தல்களில் பங்கெடுப்பது வீண் .. இதைப்போன்று இனி வரும் தேர்தல்களிலும் நிலைமை தொடரும் .. கண்டவர் கட்சிகள் என்பதற்கு இப்படியா . போதும் .. இந்த தேர்தலை போன்றே இவர்களை ஒதுக்கியே ஒழித்துக்கட்டவேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X